தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு எடுக்க வேண்டும்..! இளர்தமிழகம் நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி Mla பேச்சு..!!

image

image

image

image

image

சென்னை.நவ.25.,  இன்று சென்னை கவிக்கோ-மன்றத்தில் இளந்தமிழகம் அமைப்பு சார்பில் குர்திஸ்தான்-கேட்டலோனியா நாடுகளில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு குறித்தும், அடுத்து தமிழ் ஈழத்தில் இதனை முன்வைப்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி, விசிக பொதுச்செயலாளர் திருமாவளவன், தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், ஆழி பதிப்பக நிறுவனர் செந்தில்நாதன், சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு.மணிவண்ணன், தோழர் சைய்யது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி Mla அவர்கள், கிழக்கே தீமொர், தெற்கு சூடான், கொசவோ ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு மூலம் அம்மக்கள் விடுதலை பெற்றதற்கும், அதற்கு அமெரிக்காவும், ஐ.நா சபையும், ஐரோப்பிய நாடுகளும் துனை நின்றது குறித்தும், அயர்லாந்து, இலங்கை, குர்திஸ்தான், கேட்டலோனியா நாடுகளில் அதே விவகாரத்தில் அந்நாடுகள் இரட்டை வேடம் போடுவது குறித்தும், ரோஹிங்யா விஷயத்தில் அவர்களின் அணுகுமுறைகள் குறித்தும் ஆழமான அரசியல் உரையை நிகழ்த்தினார்கள்.

இலங்கையில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என, தான் சட்டமன்றத்தில் பேசியது குறித்தும், அந்த கோரிக்கைக்காக மஜக தொடர்ந்து போராடும் என்றும் பேசி அரங்கத்தை உற்சாகப்படுத்தினார்.

சென்னையை சேர்ந்த அரசியல் அறிவுஜீவிகள், தமிழ் உணர்வாளர்கள் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்