
கோவை.நவ.25., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரம் 24 வது வார்டு செயற்குழு கூட்டம் வார்டு செயலாளர் ஷாஜிதீன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா துணைச்செயலாளர்கள் முகமது உசேன், சாகுல் அமீது, அப்துல்கனி, அப்பாஸ், தொழிற்சங்க செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 24 வது வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரம் 21 வது வார்டு தமுமுக, மமக கிளை தலைவர் அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் தன்னை மஜகவில் இணைத்துக்கொண்டார்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1.வருகின்ற டிசம்பர் 6 இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை கலந்து கொள்ளச்செய்வது என முடிவுசெய்யப்பட்டது.
2.விரைவில் 24 வது வார்டு கிளை அலுவலக திறப்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது..
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
24.11.17