சென்னை.நவ.29., மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை மூலம் சேர்க்கை தகுதி நடைபெற வேண்டும் என தேசிய தகுதி நுழையத் தேர்வு- NEET முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக நீதிக்கு எதிரான இம்முறையை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இத்தேர்வு முறையை எதிர்த்து அரியலூர் மாணவி சகோதரி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சகோதரி அனிதாவின் தற்(படு)கொலைக்கு காரணமான நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் போராட்டம் நடத்த மெரீனா கடற்கரையை நோக்கி சென்றனர். நூற்றுக்கணக்கான காவல் துறையினரால் ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல் அருகே மடக்கி நூற்றுக்கணக்கான மஜகவினர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக கூடி அரசுக்கு எதிராக செயல்பட்டாதாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹீம், திருவல்லிக்கேணி முன்னாள் பகுதி செயலாளர் பஷீர் அகமது, மஜகவின் உறுப்பினர் ஜாவித் பாஷா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று இவ்வழக்கில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றத்தில்
செய்திகள்
மஜக தலைமைய நியமன அறிவிப்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளராக திருச்சி சேட் (எ) அ.முஹம்மது அலி (சேட்) தென்னூர், திருச்சி-17 அலைபேசி/ வாட்ஸ்அப் : 8973773332 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவரருக்கு மனிதநேய சொந்தங்களும், கட்சி நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 27.11.2017
மஜக கும்பகோணம் நகர கூட்டம்…!
தஞ்சை.நவ.25., தஞ்சை வடக்கும் மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் டிசம்பர் 6 குறித்தும், உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் ஆலோசனை கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது . கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் தலைமை தாங்கினார். கும்பகோணம் நகர செயலாளர் ஆசாத் வரவேற்று கூட்டத்தை துவக்கி வைத்தார் IKP மாவட்ட செயலாளர் மௌலவி ஹாபில் S.அல்லா பகஷ் மன்பஈ கிராத் ஓதினார்கள், மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் டிசம்பர்6 போராட்டம் பற்றி சிறப்புறையாற்றினார்கள். மாவட்ட துணை செயலாளர் பசூர்பாபு இஸ்மாயில் முன்னிலை வகித்தார். மாவட்ட சுற்றுப்புற சூழல் அணி T. ஜஹாங்கீர், மாவட்ட வர்த்தக அணி செயளாலர்S.ஏஜாஸ் பாபநாசம் ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம் மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொன்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 25_11_2017
ஆம்பூரில் களைகட்டிய மஜக பொதுக்கூட்டம்.! பொங்கி எழுந்த நல்லிணக்கம்…!!
வேலூர்.நவ.25. ,இன்று வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும்,சிறப்பான நல்லிணக்க உரையை வழங்கினர். தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்கள். மஜக மாநில துணைச்செயலாளர் வசீம் அக்ரம் அவர்களின் வழி காட்டுதலில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிரூஸ் ஜமா அவர்கள் தலைமையில் மஜகவினர் மிகச்சிறப்பான பணிகளை செய்திருந்தனர். ஆம்பூரில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக கொடிகள் கட்டப்பட்டுருந்தது. சென்னை_பெங்களூர் நெடுஞ்சாலை முழுக்க கருப்பு வெள்ளை கருஞ்சிவப்புகளால் அலங்கரிக்கப்பட்டு பரபரப்பாக இருந்தது. நகர செயளாலர் M.பிர்தோஸ் அஹமத் (எ) பித்து அவரகளின் வரவேற்புரையுடன், மிகுந்த உற்சாகத்தோடு நல்லிணக்க கூட்டம் தொடங்கியது. பல்வேறு சமுதாய மக்களும் முதன்முறையாக இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உற்சாகமாக ஆம்பூரில் ஒன்று கூடியது பெரும் மனநிறைவை தந்தது. மேடையின் முன்புறம் மட்டுமல்ல, இடமும், வலதும் முன்னும், பின்னும் என ஆர்வமாக பொதுக்கூட்ட உரையை செவி
தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு எடுக்க வேண்டும்..! இளர்தமிழகம் நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி Mla பேச்சு..!!
சென்னை.நவ.25., இன்று சென்னை கவிக்கோ-மன்றத்தில் இளந்தமிழகம் அமைப்பு சார்பில் குர்திஸ்தான்-கேட்டலோனியா நாடுகளில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு குறித்தும், அடுத்து தமிழ் ஈழத்தில் இதனை முன்வைப்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி, விசிக பொதுச்செயலாளர் திருமாவளவன், தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், ஆழி பதிப்பக நிறுவனர் செந்தில்நாதன், சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு.மணிவண்ணன், தோழர் சைய்யது, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி Mla அவர்கள், கிழக்கே தீமொர், தெற்கு சூடான், கொசவோ ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு மூலம் அம்மக்கள் விடுதலை பெற்றதற்கும், அதற்கு அமெரிக்காவும், ஐ.நா சபையும், ஐரோப்பிய நாடுகளும் துனை நின்றது குறித்தும், அயர்லாந்து, இலங்கை, குர்திஸ்தான், கேட்டலோனியா நாடுகளில் அதே விவகாரத்தில் அந்நாடுகள் இரட்டை வேடம் போடுவது குறித்தும், ரோஹிங்யா விஷயத்தில் அவர்களின் அணுகுமுறைகள் குறித்தும் ஆழமான அரசியல் உரையை நிகழ்த்தினார்கள். இலங்கையில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என, தான் சட்டமன்றத்தில் பேசியது குறித்தும், அந்த கோரிக்கைக்காக மஜக தொடர்ந்து போராடும் என்றும் பேசி அரங்கத்தை உற்சாகப்படுத்தினார். சென்னையை சேர்ந்த அரசியல் அறிவுஜீவிகள், தமிழ் உணர்வாளர்கள் அரங்கம்