(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் மே தின வாழ்த்துச் செய்தி) உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாக மே தினம் மே-01 அன்று கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் தொழிலாளர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்த போராட்டத்தில் கிடைத்த தியாக பூர்வமான வெற்றியே #மே_தின-மாக தொழிலாளர் வர்க்கத்தால் போற்றப்படுகிறது. உலக தொழிலாளர்களின் வியர்வையாலும், இரத்தத்தாலும் தான் புதிய, புதிய முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் உலகம் கண்டு மகிழ்கிறது. இன்று சந்தை பொருளாதார யுகத்தில், கருவி மயமாகும் காலச்சூழலில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க சபதமேற்போம். உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்_செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 01.05.2018
செய்திகள்
மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் குடியாத்தம் வருகை..! மாவட்ட நகர நிர்வாகிகள் சந்திப்பு..!!
வேலூர்.ஏப்.30.,வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம் நகரத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் நேற்று (29.04.2018) #SG_அப்சர்_சையத் வருகை புரிந்து மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி சார்பாக வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் பற்றி கீழ்கண்டவாறு விவரித்தார்., 1.வேலூர் மேற்கு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மஜக இளைஞர் அணி சார்பாக அரசியல் கருத்தரங்கம் நடத்துதல். 2. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விரைவாக நடத்தி பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்களை கட்சியில் இணைத்தல். 3.வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் இளைஞரணி நிர்வாகிகளை மிக விரைவாக நியமித்தல். 4. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க , பசுமையான மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க மஜக வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுதல். 5. மாவட்டம் முழுவதும் நகர் வாரியாக இரத்த தான முகாம் நடத்துதல். இதில், வேலூர் மே மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப் ,மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன், குடியாத்தம் நகர செயலாளர்
ஆசிபா விவகாரம் மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டம் மஜக பங்கேற்பு!
மதுரை.ஏப்.29., காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு எல்லா இயக்க அரசியல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள ஜமாத் மற்றும் பல்வேறு இயக்க கட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மஜக தெற்கு மாவட்ட செயலாளர் மொய்தீன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார் ஆகியோர் கலந்துண்டனர். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் பாரூக் அவர்கள் போராட்ட வியூகங்கள் குறித்த சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்தார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம். 29-04-2018
அறிஞர்களை மதிக்கும் சமூகமே உன்னதமானது! நாகூரில் நூல் வெளியீட்டு விழாவில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
நாகை. ஏப்.29., நேற்று (28/04/2018) நாகூரில் "வெள்ளி மணியில் துள்ளிய துளிர்கள்" என்ற நூலை நாகூரின் புகழ்பெற்ற எழுத்தாளர் மு.அ.அபுல் அமீன் என்பவர் எழுதியிருக்கிறார். இவ்வெளியீட்டு விழா நாகூரில் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் V.சாதிக் தலைமையில் நடைபெற்றது. இந்நூலை நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் பின்வருமாறு... நாகூர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். இந்த ஊரில் பல எழுத்தாளர்களும், இலக்கிய வாதிகளும், படைப்பாளிகளும் உருவாகி இருக்கிறார்கள். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் நாகூரை சேர்ந்தவர்கள் பல பத்திரிக்கைகள் நடத்தியிருக்கிறார்கள். இன்றும் பலர் அப்படி திகழ்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு நாகூர் முஸ்லிம் சங்கம் ஊக்குவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன். இது போட்டியும், போராமையும் நிறைந்த உலகம். யாருக்கும் நல்ல பெயர் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எவ்வளவு நல்லது செய்தாலும் கடைசியில் கெட்ட பெயரே மிஞ்சிகிறது. இதநாலையே நல்லவர்களும், நேர்மையானவர்களும் பொது வாழ்வுக்கு வர அஞ்சுகிறார்கள். இங்கு நடிகர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார்கள். ஆனால் வாழும் காமராஜராகவும், கக்கனாகவும், காயிதே மில்லத்தாகவும் நடமாடும் அய்யா நல்லக்கண்ணு அவர்களை யாராவது
மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
திருப்பூர்.ஏப்.28., திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு 7மணியாளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் முஸ்தாக் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, கட்சியின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் மாவட்ட துணைச்செயலாளராக மாஸ்கோ நகர் லியாகத் அலி தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் J.மீரான், ஆகாரம் அக்பர் அலி, ரஹ்மான், மன்சூர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்கர், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் சாகுல், மனித உரிமைகள் அணி மாவட்ட செயலாளர் J.செளகத் அலி, மாவட்ட பொருளாளர் சாகுல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளபில் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசீக், லியாகத் அலி, சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருப்பூர்_மாவட்டம் 28-04-2018