(மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியீடும் வாழ்த்துச் செய்தி..!) ஆசியாவின் தொட்டிலாக கொண்டாடப்படும் நாடு மலேசியா. நேற்று அங்கே நடைப்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடப்பட்டிருக்கிறது. கடந்த 60 ஆண்டு காலமாக அந்த நாட்டை தேசிய முன்னணி என்ற மூன்று இனங்களை பிரதிபலிக்கும் 'பாரிசான் நேஷ்னல்' ஆண்டு வந்தது .அதில் அவர் 70 சதவீத மக்கள் தொகையை கொண்ட பூர்வீக இனமான மலாய் மக்களை கொண்ட அம்னோ கட்சி பிரதானமாக இருந்தது. 60 ஆண்டு கால தொடர் ஆட்சியில் நஜீப் துன் ரசாக் ஆண்ட போது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தது, அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் பிலிப்பைன்ஸ் 'இமல்டா' வுடன் ஒப்பிடப்பட்டார். மனைவியின் ஊழலால் அவர் பெயர் கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வெளிநாடு ஒன்றில் இருந்து அவர் பெற்றதாக கூறப்படும் நன்கொடை பெரும் ஊழலாக விவாதிக்கப் பட்டது. இந்நிலையில் தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை அப்துல்லா படாவி கையில் ஒப்படைத்த மஹாதீர், மீண்டும் தனது 92 வயதில் களத்துக்கு வந்தார். கடும் விமர்சனங்களை அரசுக்கு எதிராக கூறினார். இதனால் அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் புதிய கட்சியை
செய்திகள்
தேனி மாவட்டம் பி.துலுக்கப்பட்டியில் சுமூக சூழலை காவல்துறை ஏற்படுத்த வேண்டும்..! பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மஜக துணைப் பொதுச்செயலாளர்..!
தேனி.மே.10., தேனி மாவட்டம் பி.துலுக்கப்பட்டியில் கடந்த சில தினங்கள் முன்பு இருதரப்புக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாக அங்கு பெரும் வன்முறை கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சந்தித்த #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்கள், மஜக தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ், தேனி மாவட்ட துணைசெயலாளர் கம்பம் கலில், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான், கம்பம் நகர நிர்வாகி அரபாத், மற்றும் மஜக பெரியகுளம் நிர்வாகிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். . பி.துலுக்கப்பட்டி கிராமத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், அங்கு நிலவும் நல்லிணக்கத்தை விரும்பாத சிலர் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான வாசகம் கொண்ட பேனரை சிலர் கட்டியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சம்பவத்தால் இரு சமூகத்திற்கிடையே பிரச்சினை எழும் என்று காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது. தொடர்ந்து அங்கு இது தொடர்பாக அவ்வப்போது வாய்த்தகராறு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகி வந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்
தமிழக முதல்வருடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு.!
மே-15 தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க வேண்டும்..! ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை சுமுகமாக தீர்க்க வேண்டும்..! நாகூர் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்..! (தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் கோரிக்கை..) இன்று (09-04-18) தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவரது கிரீன்வேஸ் இல்ல வீட்டில் சந்தித்துப் பேசினார். நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில், காரைக்காலில் அமைந்துள்ள 'மார்க்' தனியார் துறைமுகத்தால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதனால், அங்கு நிலக்கரியை நிரந்தரமாக இறக்குமதி செய்ய தடை விதிக்க புதுவை அரசுக்கு, தமிழக அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கடந்த மே 4 அன்று நாகூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, 64 பேர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரமலான் நோன்பு கஞ்சிக்கு, தமிழக அரசு சார்பில் வினியோகிக்கப்படும் இலவச அரிசியை மே 15 தேதிக்குள் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கிடைக்க செய்யும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்
தமிழக ஹாஜிகளுக்கு புத்தக பயிற்சி முகாம்…! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று உரை..!!
சென்னை.மே.09., தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 2018ஆம் வருடம் மெக்கா (புனித ஹஜ் யாத்திரை) செல்லும் ஹாஜிகளுக்கு புத்தக பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 09.05.2018
காஷ்மீரில் மரணமடைந்த தமிழரின் இறுதி சடங்கில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!
சென்னை.மே.09.,காஷ்மீரில் அரசுப்படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கல்வீச்சில் படுகாயமடைந்து உயிர் துறந்த தமிழர் திருமேனி செல்வன் அவர்களின் உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் உடல் இறுதி சடங்குகாக எடுத்து வரப்பட்டது. அப்போது #மனிதநேய_ஜனநாயக_கட்சி (#மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் வருகை தந்து அவரது உடலை பார்வையிட்டு, அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுதர்சனம் அவர்களும் அங்கு வந்திருந்தனர். பொதுச்செயலாளருடன் மஜக மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ், மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், பொருளாளர் செய்யது இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன், ஆவடி நகரச்செயலாளர் சாகுல் ஹமிது, பொருளாளர் நாகூர் மீரான், துணை செயலாளர் தேவகாந்தி பாபு மற்றும் சதாம் உசேன், கபீர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 09.05.2018