தூத்துக்குடி.மே.30., இன்று #தூத்துக்குடியில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைப் பெறும் பொதுமக்களை, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 1/2 மணி நேரத்திற்கு முன்பு, #ரஜினிகாந்த் வந்து சென்றார். அப்போது அவர்களை பார்த்தப் பிறகு, போராட்டக்காரர்களை #சமூக_விரோதிகள் என கொச்சைப்படுத்தியது TV களில் பரப்பரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இதனால் மருத்துவமனையே கொந்தளிப்பாக இருந்தது. அப்போது #மஜக வினருடன், தமிமுன் அன்சாரி MLA மருத்துவமனைக்கு வந்ததும், அவர்கள் மிகுந்த அன்போடும், நம்பிக்கையோடும் வரவேற்றனர். பலரும் தலைக்காயத்திற்கு ஆளானதை பார்க்க முடிந்தது. #துப்பாக்கி குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் உடல்நிலை தேறி வருவதையும் பார்க்க முடிந்தது. எல்லோரும் கண்ணீர் மல்க போலீஸாரின் அராஜகத்தை சுட்டிக் காட்டினர். 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி அங்கு பெரிய கட்டோடு உட்கார்ந்திருந்தார். அவரை விசாரித்தப்போது, போலீஸார் அவரது கையைப் பிடித்து முறுக்கி உடைத்ததாக கூறி தழுதழுத்தார். இப்படி ஒவ்வொருவரின் கண்ணீரும், துயரமும் அனைவரையும் உருக்கியது. நேற்று பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்றத்தில் தூத்துக்குடி மக்களுக்காக பேசியதை தொலைக்காட்சிகளில் பார்த்ததாகவும், எங்களுக்கு குறல் கொடுத்ததற்காக நன்றி என்றும், உங்களை போன்ற தலைவர்களை நம்புகிறோம் என்றும்
செய்திகள்
இதயங்களால் ஒன்றினைவோம்..! திருப்பூரில் மஜக சார்பில் இப்தார் நிகழ்ச்சி..!!
திருப்பூர்.மே.29., இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பில் நோன்பு துறப்பு எனும் இஃப்தார் நிகழ்ச்சி HMS திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணைச்செயலாளர்கள், மீரான், லியாகத் அலி, ரஹ்மான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துரை வழங்கினார். மாநில துணைச்செயலாளர் டி.கே.பஷீர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் அலி நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் வானவில் காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளபில் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசீக், லியாகத் அலி, மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் அஸ்கர். மாவட்ட வர்த்தகர் அணிச்செயலாளர். ஷேக் பரித், தொழிற்சங்க அணி மாவட்ட செயலாளர் சாகுல், மாவட்ட தொழிற்சங்க இணைச்செயலாளர்கள் அப்துல் வகாப், கபீர், தாராபுரம், அவினாசி நிர்வாகிகள் , பெரிய தோட்டம் அபு, செரங்காடு அப்பாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் உலமாபெருமக்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என
வேல்முருகனுடன் தமிமுன் அன்சாரி, தனியரசு சந்திப்பு!
சென்னை. மே.29., தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டால் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்திக்க சென்ற போது, #தமிழக_வாழ்வுரிமை_கட்சி தலைவர் வேல்முருகனை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அங்கு அவர் தண்ணீர் கூட அருந்தாமல் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அவரை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். மேலும் உயர் மருத்துவர்களை தொடர்புக் கொண்டு அவருக்கு உரிய சிகிச்சைகளை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இவர்களுடன் மஜக மாநில துணைச்செயலாளர் சமீம் அஹமது, திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர், மாணவர் இந்தியா மாநிலச்செயலாளர் அஸாருதீன், மாநில துணை செயலாளர் கோவை பஷீர் ஆகியோர் உடன் சென்றனர். வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி இன்று பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் நடத்திய கூட்டு ஆர்ப்பாட்டத்தில் மஜக சார்பில் மாநில துணைச்செயலாளர் சமீம் அஹமது பங்கேற்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING, #சென்னை. 29/05/2018
MKP சனையா மண்டலம் மஜகவில் இணைந்த புதிய உறுப்பினர்கள்..!
சனையா.மே.29., இன்று மாலை கத்தார் சனையா மண்டலத்திற்கு உட்பட்ட மத்தார் கதீம் பகுதியில் மண்டல செயலாளர் சகோதரர் நூர் முஹம்மத் தலைமையில் புதிய உறுப்பினர்கள் மஜகவில் இணைந்தனர். இந்த சந்திப்பின் போது வருகிற ஜூன் 1 அன்று நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தகவல்: #MKP_IT_WING #MKP_சனையா_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்.
துப்பாக்கியால் சுட அனுமதி கொடுத்தது யார்? சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA காட்டம்!
சென்னை.மே.29., இன்று சட்டமன்றத்திற்கு சென்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்றார். மேலும் தூத்துக்குடியில் கொல்லப்பட்ட 13 தியாகிகளின் படம் பொறித்து "இவர்களை சுட உத்தரவிட்டது யார்"? "தியாகிகளின் ரத்தம் வீண் போகாது"! என்ற வாசகம் அடங்கிய பேனரை தூக்கிப் பிடித்து #மஜக-வின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சட்டமன்றம் கூடி, கேள்வி - பதில் நேரம் முடிந்தபிறகு, அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மாத்தின் மீது பேசினார். அவருக்கு பிறகுதான் மாண்புமிகு உறுப்பினர்கள் சகோ.TTV தினகரன் அவர்களும் எதிர்கட்சி தலைவர் சகோ. திரு.ஸ்டாலின் அவர்களும், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் K.R ராமசாமி அவர்களும் பேசினார். சட்டசபையில் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசும்போது அவை முழு அமைதி காத்தது. முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் உட்பட அனைவரும் கூர்ந்து கவனித்தனர். அவர் பேசியதாவது… மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கடந்த மே மாதம் 22ஆம் தேதி #ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைப்பெற்றது. அதனால் மாண்புமிகு அம்மா அவர்கள் உயிரைச் கொடுத்து உருவாக்கிய,