திருவாரூர்.அக்.03,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 03.10.17
முகாம்கள்
மஜக கோவை மாவட்ட மருத்துவ அணியின் சேவையை பாராட்டிய கோவை அரசு மருத்துவமனை!
கோவை.ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிர்காக்கும் இரத்ததானம் செய்தார்கள், இச்செயலை பாராட்டி கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் இருப்பிட மருத்துவதிகாரி செளந்திரவேல் அவர்கள் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், சிங்கை சுலைமான், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 31.08.17
மஜக வேலூர் (கி) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…
வேலூர்.ஆக.25., வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி 1வது வார்டு கிளையின் சார்பாக இன்று JJ நகரில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி கிளைச்செயலாளர் நசீருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் S.முஹம்மத் ஜாபர் கட்சிக்கொடியை ஏற்றிவைத்தார். பின்பு காட்பாடி சித்தூர் ரோட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் H.ரபீக் ரப்பானி அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் 300க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் வசீம், ஜாகிர் உசேன், சையத் உசேன் மற்றும் கணியம்பாடி ஒன்றியம், காட்பாடி, T.K.புரம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_ தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 25.08.2017
மஜக குடியாத்தம் நகர சார்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம்..! மஜகவின் மக்கள் பணியை பாராட்டிய பொதுமக்கள்..!!
வேலூர் (மே) ஆக.21,. குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி, சாகர் மருத்துவமனை பெங்களூரு, ஸ்ரீ செல்லப்பா மருத்துவமனை சேலம் மற்றும் பெங்களூரு கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் குடியாத்தம் MBS திருமண மண்டபத்தில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் S.M.நிஜாம்முத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இம்முகாமை மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் B.Sc அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் MBA, மாவட்ட துணை செயலாளர்கள் SMD.நவாஸ், சையத் ஜாவித், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் S.M.ஷாநவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப், நகர துணை செயலாளர் N.சலிம், நகர இளைஞர் அணி செயலாளர் A.முஹம்மத் கெளவுஸ் ஆகியோருடன், கிளை செயலாளர் N.அல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட, நகர, கிளை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக J.அல்லாபாகஷ், MBS டைல்ஸ், M.பிரகாஷ் பாபு DSP, S.அருணோதயம் தலைவர் வே,மா,பெட்ரோல் வணிகர்
இளையான்குடி நகரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..! மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது துவக்கிவைத்தார்கள்..!!
சிவகங்கை.ஆக.13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் 12.08.17 சனிக்கிழமையன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நோய் தடுப்பு நடவடிக்கையில் மஜக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளையான்குடி நகர மஜக சார்பில் பேருந்துநிலையம், பொதுமக்கள் கூடும் இடம், ஆட்டோ நிறுத்தம் மற்றும் பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார், பேருந்து மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு தேடி சென்று நிலவேம்பு கசாயத்தை மஜக மாநில பொருளாளர் வழங்கினார்கள். நகர செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, இஸ்லாமிய கலாச்சார பேரவை குவைத் மண்டல செயலாளர் சீனி முஹம்மது ஆகியோருடன், நகர துணைச் செயலாளர்கள் செய்யது மஹபூப், சிராஜ் அஹமது, ஜமால் முஹம்மது, ஜஹபர் சாதிக்,