மஜக குடியாத்தம் நகர சார்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாம்..! மஜகவின் மக்கள் பணியை பாராட்டிய பொதுமக்கள்..!!

image

image

image

வேலூர் (மே) ஆக.21,. குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி, சாகர் மருத்துவமனை பெங்களூரு, ஸ்ரீ செல்லப்பா மருத்துவமனை சேலம் மற்றும் பெங்களூரு கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் குடியாத்தம் MBS திருமண மண்டபத்தில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மருத்துவ அணி பொருளாளர்
S.M.நிஜாம்முத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இம்முகாமை மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் B.Sc அவர்கள் துவக்கி வைத்தார்.

இதில் மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் MBA, மாவட்ட துணை செயலாளர்கள் SMD.நவாஸ், சையத் ஜாவித், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் S.M.ஷாநவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப், நகர துணை செயலாளர் N.சலிம், நகர இளைஞர் அணி செயலாளர் A.முஹம்மத் கெளவுஸ் ஆகியோருடன்,

கிளை செயலாளர் N.அல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,  மாவட்ட, நகர, கிளை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்பு குழு பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக J.அல்லாபாகஷ், MBS டைல்ஸ், M.பிரகாஷ் பாபு DSP, S.அருணோதயம் தலைவர் வே,மா,பெட்ரோல் வணிகர் சங்கம், A.ஜாபர் அலி மஹாராஜா சுவிட்ஸ் உரிமையாளர், ஆலியார் அதாவுல்லா அகில இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் மாநில துணை செயலாளர். ரோட்டரி கிளப் இயக்குநர் கோபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இம் முகாமில் ஏராளமான ஆண்கள்  பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர், காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்ற இம் முகாமில் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு  இலவச மருத்துவ பரிசோதனைகளையும் மருந்துகளையும் பெற்றுச் சென்றனர்,

இந்த முகாம்களில் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் நடைபெற்றது, குறிப்பாக இருதயம், இடுப்பு மூட்டு, மூதுகு தண்டு, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, கண் பரிசோதனை மற்றும்  பெண்களுக்கான மார்பக, கர்பப்பை புற்று நோய் மற்றும் அனைத்து புற்று நோய்க்கான பரிசோதனைகள் நடைபெற்றது, பெண்களுக்கென்று தனியாக பிரத்யேக பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனைக்கு பின், இருவர் இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கும், இருவர்  முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்கும், ஒருவர் தொண்டை புற்று நோய் சிகிச்சைக்கும் மற்றும் ஒருவர் இருதய ஆஞ்ஜியோகிராம் சிகிச்சைக்கும் தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முடிவாக இச் சிறப்பு முகாமிற்க்கு நகர பொருளாளர் முபாரக் அஹ்மத் நன்றியுரை தெரிவித்தார்.

இம் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்ற பொது மக்கள் மஜகவின் சேவையை பாரட்டினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேலூர் மேற்கு மாவட்டம்
21.08.17