மஜக கோவை மாவட்ட மருத்துவ அணியின் சேவையை பாராட்டிய கோவை அரசு மருத்துவமனை!

image

கோவை.ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிர்காக்கும்
இரத்ததானம் செய்தார்கள்,
இச்செயலை பாராட்டி கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் இருப்பிட மருத்துவதிகாரி செளந்திரவேல் அவர்கள் மருத்துவ அணி மாவட்ட செயலாளர்  அபு அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்  MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், சிங்கை சுலைமான், மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
31.08.17