சேலம்.ஆக.31., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று 30/08/2017 புதன் கிழமை மாலை 8 மணியளவில் மாவட்டச் செயலாளர் A.சாதிக் பாஷா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் U.அமீர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் S.சையத் முஸ்தபா, A.ஷேக் ரபி, O.S.பாபு, A.மஹபூப் அலி, A.அம்சத் அலி, வர்த்தக அணி செயலாளர் A.முஹம்மது அலி, தொழிலார் அணி துணைச் செயலாளர் சதாம் உசேன், இளைஞர் அணி செயலாளர் சான் பாஷா மற்றும் அஸ்லம் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சேலம் மாநகர் மாவட்டம்
31.08.17