பிப்.06., சென்னை எண்ணூரில் கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட எண்ணெய் களிவுகளின் பாதிப்பை மனிதநேய ஜனநாய கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கும், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வளர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். உடன் மாநில செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாசர், மாவட்ட பொருளாளர் ஜாபர் உள்பட மௌலா, கரிமுல்லாஹ், தாரிக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 05.02.17
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
சைதாப்பேட்டை பகுதியில் மஜக கொடி ஏற்றம்…
பிப்.06., வேலூர் கிழக்கு மாவட்டம் 3வது மண்டலம் 31வது வட்ட சைதாப்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி 05-02-2017 மாலை நடைபெற்றது. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றிவைத்து சிற்றுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) வேலூர் கிழக்கு மாவட்டம் 05-02-2017
லால்பேட்டையில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு : மஜக பங்கேற்பு
பிப்.05., இன்று பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மோடி பாசிச பாஜக அரசை கண்டித்து ஜமாத்துல் உலமா மற்றும் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பாக லால்பேட்டையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும் கலந்து கொன்டார்கள். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி எழுச்சியுரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) கடலூர் மாவட்டம். 05.02.17
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் மஜகவின் புதிய கிளை தொடக்கம்…
பிப்.05., தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் இன்று (05-02-2017) மாலை 7மணியளவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில் மற்றும் காயல்பட்டினம் நகர செயலாளர் ஜிப்ரி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வடக்கு ஆத்தூர் கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பட்டியல்... கிளை செயலாளர்: அன்வர் பாஷா (8428324508) கிளை பொருளாளர்: தமிம் அன்சாரி (9789159136) துனை செயலாளர்கள்: 1.அபுபக்கர் சித்திக் (8015736293) 2.பாசில்காஜா (7871822805) ஆகியோர் ஒரு மணதாக தெர்ந்தெடுக்கப்பட்டார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம், 05-02-2017
ஊராளிபட்டியில் மஜக புதிய கிளை துவக்கம்!
பிப்.05., திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வடமதுரை ஒன்றியம் ஊராளிபட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சியில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கிளையின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர். P. ராஜூ (கிளை செயலாளர்) 7639332414 M. செல்வராஜ் (கிளை பெருளாளர்) 9025125167 துணை செயலாளர்கள் M. பூமிராஜ் R. விஷ்வநாதன் - 9751221394 V. பெருமாள் - 8940778014 தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK_IT_WING) திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் 05-02-2017