மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகர கிளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் நாள் : 28-02-2017 நேரம்: காலை 9.00 மணி (இறைவன் நாடினால்) 1) மூண்று இடங்களில் கொடியேற்றுதல், 2) மரக்கன்றுகள் நடுதல், 3) உறுப்பினர் சேர்க்கை முகாம், 4) அரசு மருத்துவமணை உள் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குதல்... இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நகர செயலாளர் தலைமையில், நகர நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள் மனித நேய சொந்தங்கள் அனைவரும் வருக தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 23.02.2017
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி .
நாகை.பிப்.22., இன்று மாலை நாகப்பட்டினம் தொகுதியில் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டார் . கருவேல மரங்களை அகற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு மாலை 5 மணிக்கு MLA அலுவலகம் வந்து அலுவல் பணிகளை தொடங்கினார். தொகுதி முழுக்க வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை MLA அவர்களிடம் வழங்கினர் . அதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 22-02-2017
மஜகவின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை…
வேலூர்.பிப்.22., கடந்த 20.02.2017 அன்று வேலூர் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாதததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் விளைவாக நேற்று (21.02.2017) விடியற்காலை 6.30. மணியளவில் 3ஆம் மண்டல மாநகராட்சி அதிகாரி மஜகவின் கோரிக்கை வைத்த இடங்களை பார்வையிட்டார். பார்வைக்கு பிறகு துப்புரவு பணியாளர்களை உடனே வரவைத்து குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். உடன்: மஜக களப்போராளிகள். தகவல்:மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING). வேலூர் கிழக்கு மாவட்டம். (22.02.2017)
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு மஜக பொதுக்கூட்ட அழைப்பு…
சென்னை.பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 28_02_17 செவ்வாய்கிழமை மாலை 6மணியளவில் சென்னை, ஷேக் தாவுது தெருவில் "மக்கள் திரள் பொது கூட்டம்" நடைபெற உள்ளது. அது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித், மாவட்ட துணை செயலாளர் பீர் முஹம்மது , பகுதி செயலாளர் பஷீர், பொருளாளர் அசன் பொதுக்கூட்ட அழைப்பை வழங்கினர்... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) மத்திய சென்னை மாவட்டம். 22.02.17
மதுக்கடையை அகற்றக்கோரி மஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
வேலூர்.பிப்.22., வேலூர் மாநகரம் பில்டர்பெட் சாலையில் அமைந்துள்ள மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூராக உள்ளது எனவும், மதுக்கடைக்கு எதிரில் கல்வி நிலையமான B.P.R நர்சரிங் இருப்பதும், சில அடி தூரத்தில் கிருத்தவ தேவாலயமும், கோவிலும் இருப்பதன் காரணமாக மதுக்கடை மிகவும் இடையூராக இருப்பதை சுட்டிக்காட்டி உடனே மதுக்கடையை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. ராமன் அவர்களிடம் மஜக மாவட்ட செயலாளர். S.முஹம்மத் ஜாபர் அவர்களின் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மஜகவின் மாவட்ட,நகர,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING). வேலூர் கிழக்கு மாவட்டம். 22.02.2017