வேலூர்.பிப்.22., வேலூர் மாநகரம் பில்டர்பெட் சாலையில் அமைந்துள்ள மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூராக உள்ளது எனவும், மதுக்கடைக்கு எதிரில் கல்வி நிலையமான B.P.R நர்சரிங் இருப்பதும், சில அடி தூரத்தில் கிருத்தவ தேவாலயமும், கோவிலும் இருப்பதன் காரணமாக மதுக்கடை மிகவும் இடையூராக இருப்பதை சுட்டிக்காட்டி உடனே மதுக்கடையை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. ராமன் அவர்களிடம் மஜக மாவட்ட செயலாளர். S.முஹம்மத் ஜாபர் அவர்களின் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மஜகவின் மாவட்ட,நகர,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING).
வேலூர் கிழக்கு மாவட்டம்.
22.02.2017