மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.எம்.ஹாரிஸ் அவர்கள், மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 18.04.2022
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர்களாக செயல்பட்டு வந்த புதுமடம் அனீஸ், நாகை முபாரக் ஆகியோரும், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க (MJTS) மாநில செயலாளராக செயல்பட்டு வந்த கோவை MH.ஜாபர் அலி அவர்களும் கட்சியின் மாநிலச் செயலாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 18.04.2022
லால்பேட்டையில் ஹிஜாப் உரிமை முழக்க கண்டன பொதுக்கூட்டம்…! மஜக பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது பங்கேற்று உரையாற்றினார்..!
கடலுர் மார்ச்:- 27, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய அடிப்படை உரிமையான ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று கண்டன உரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹுசைன், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், முகமது ரபிக், முகமது ரியாஸ, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் AMK முகமது ஹம்ஜா, துபை மாநகர முன்னாள் செயலாளர் சபிக்குர் ரஹ்மான், நகர பொருளாளர் யூனுஸ், நகர நிர்வாகிகள் ஜாஹிர், நூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி MJKITWING கடலூர் தெற்கு மாவட்டம் 27.03.2022
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளாராக பணியாற்றி வரும் அசாருதீன், சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் மாநில தலைவராக பணியாற்றி வரும் ஜாவித், மீனவர் அணி மாநில செயலாளராக பணியாற்றி வரும் பார்த்தீபன், விவசாய அணியின் மாநில செயலாளாராக பணியாற்றி வரும் அப்துல் சலாம் ஆகியோர் கட்சியின் மாநில துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 26.04.2022
விழுப்புரத்தில் மஜக ஆம்புலன்ஸ்..! மஜக மா.பொ. எஸ் எஸ் ஹாரூன் ரசீது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்..!
விழுப்புரம்.மார்ச்.25.,விழுப்புரம் தெற்கு மாவட்டம், விழுப்புரம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று மஜக அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் JSM.சவுகத் அலி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது,நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நெய்வேலி இப்ராஹிம், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து வைத்து ஆம்புலன்சை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹீர், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர்கள் அபுதாஹீர், நாசர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அஸ்மத்வுல்லாஹ்,மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கனி, யாசின், KSM பகுருதீன், தமிமுன் அன்சாரி, உலமாக்கள் ஜாஃபர் அலி, சவுக்கத் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆதம், மாவட்ட துணைச் செயலாளர் உசேன்,கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜாவித், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் ஷாகுல்,