விழுப்புரத்தில் மஜக ஆம்புலன்ஸ்..! மஜக மா.பொ. எஸ் எஸ் ஹாரூன் ரசீது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்..!

விழுப்புரம்.மார்ச்.25.,விழுப்புரம் தெற்கு மாவட்டம், விழுப்புரம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று மஜக அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் JSM.சவுகத் அலி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது,நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நெய்வேலி இப்ராஹிம், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து வைத்து ஆம்புலன்சை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹீர், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர்கள் அபுதாஹீர், நாசர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்சாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அஸ்மத்வுல்லாஹ்,மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கனி, யாசின், KSM பகுருதீன், தமிமுன் அன்சாரி, உலமாக்கள் ஜாஃபர் அலி, சவுக்கத் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ரிஸ்வான்,
மாவட்ட பொருளாளர் ஆதம், மாவட்ட துணைச் செயலாளர் உசேன்,கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜாவித், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் ஷாகுல், விழுப்புரம் நகர செயலாளர் பாஷா, நகர பொருளாளர் ஜபருல்லாஹ, நகரத் துணைச் செயலாளர் ஹாஜி முஹம்மது, மருத்துவ அணி சதாம், மருத்துவ துணை பாசில், வர்த்தக அணி மன்சூர் மேலும் முன்னால் நிர்வாகிகள் கேளம்பாக்கம் ந.அன்வர் பாஷா, துறைமுகம் சிக்கந்தர் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
25.03.2022