You are here

ஹிஜாப் தடையைஎதிர்த்து..! மஜக வடசென்னை மேற்கு மாவட்டம் பெரம்பூர் பகுதியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!

சென்னை.மார்ச்.25.,கா்நாடகத்தில் கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து, வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனா்.

M.R.நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்வர் தலைமை வகித்து, விழிப்புணா்வு முழுக்கங்களை எழுப்பினாா். துணை பொதுச் செயலாளா் என்.ஏ.தைமிய்யா கண்டன உரையாற்றினார்.
மஜக மகளிா் அணியினா் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனா்.
36வது வட்ட செயலாளர் ஷேக் மொய்தீன், பொருளாளர் இஸ்மாயில் உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனா்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJKITWING
வடசென்னை மேற்கு மாவட்டம்
25.03.2022

Top