You are here

கோவையில் மஜக 7ஆம் ஆண்டு விழா.!கொடியேற்றி இரத்தானம் வழங்கி கொண்டாட்டம்!

பிப்:28.மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் மஜக வினர் கொடியேற்றுதல், இரத்ததானம் வழங்குதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக கோவையில் மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, ஆகியோர் பங்கேற்று கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் இரத்தானமுகாம் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் செபீக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா, அவர்கள் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்
.
இந்நிகழ்வுகளில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான், ஹனீபா, மற்றும் மாவட்ட அணி, பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJKITWING
கோவை மாநகர் மாவட்டம்
28.02.2022

Top