பிப்:28.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடி நாள் என அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மனித நேய ஜனநாயக கட்சியினர் கொடியேற்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்று விழா மாவட்ட துணை செயலாளர் சேக் அஹமத்துல்லாஹ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்சியின் மூத்த முன்னோடு சர்புதீன், அவர்கள் பங்கேற்று கொடியேற்றினார்.
இந்நிகழ்வில் வேதை நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தோழமை கட்சி நண்பர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
நாகை மாவட்டம்.
28.2.2022