ஜன.14., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இன்று ( 14.01.201) மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விரைவில் மாபெரும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது... இதில் மாவட்ட துணைச் செயலாளர் கறம்பக்குடி முகம்மது ஜான் உள்பட நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு, புதுக்கோட்டை மாவட்டம். 14_01_2017
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
சமூக_நல்லிணக்க_பொதுக்கூட்டம்!
கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் ஜமாத்துகளின் ஆதரவோடு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA. INTJ தலைவர் பாக்கர், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், ஜமாத்துல் உலமா மாநில துணை தலைவர் தர்வாஷ் ரஷாதி உள்ளிட்டோர் உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகவல்; மஜக ஊடக பிரிவு கடலூர் வடக்கு.
துபையில் மாபெரும் எழுச்சி பலம் காட்டிய மஜக
ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் நேற்று (06-01-17) மஜக சார்பு வெளிநாடு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் #சமூக_நல்லிணக்க_மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. #அமீரக_செயலாளர் #மதுக்கூர்_அப்துல்_காதர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமீரக பொருளாளர் #அதிரை_அஸ்ரப், IKP செயலாளர் #அப்துல்_ரஹ்மான், அமீரக துணைச் செயலாளர்கள் #அசாலி_அஹமது, #அபுல்_ஹசன்,#பத்தாஹீல்லாஹ், அமீரக ஊடக பிரிவு செயலாளர் #ஜியாவுல்ஹக்,அமீரக மூத்த ஆலோசகர் #சர்புதீன், அனைத்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அபுதாபி IKP செயலாளர் #சபியுல்லா_மன்பஈ இறைவசனத்துடன் துவக்கினார், அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரெஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். மறைந்த தமிழக முதல்வர் #ஜெயலலிதா_அம்மா அவர்களுடைய பெயர் மாநாட்டு அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. மாநாட்டில், ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்ககுநர் சேக்தாவூது, ஆரிபா குழுமம் நிர்வாக இயக்குனர் தோப்புத்துறை சுல்தானுல் ஆரிப், மணமேல்குடி நஜிமுத்தீன்,அபுதாபி தமிழ் சங்கம் ரெஜினால்ட் சாம்ஸன்,சமூக ஆர்வலர் சுகைபூதீன்,இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான்,சமூக ஆர்வலர் குத்தாலம் அஷ்ரப்,மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் ரஃபி முகம்மது, அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் யாசர் அரபாத், நாகை மெய்தீன், தொழிலதிபர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் #மௌலா_நாசர்,
ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நபிகள் நாயகம்! மதுக்கூரில் தா.பாண்டியன் பேச்சு!
இன்று தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். தோழர் தா.பாண்டியன் அவர்களின் உரையின் சுருக்கம் பின்வருமாறு. இயேசு தன் கொள்கைகளை மட்டும் கூறினார். அவரது சீடர்கள் அதை பரப்பினார்கள். ஆனால் முகம்மது நபி அவர்கள் இறைவன் அருளியதாக குர் ஆனின் கருத்துக்களை கூறினார். இது வரை அரேபிய மொழியில் இது போன்ற ஒரு இலக்கிய நூல் இல்லை என்று அமெரிக்க அறிஞர் கூறினார். நபிகள் நாயகம் மார்க்கத்தை போதித்து ஒரு அரசையும் உருவாக்கி இரண்டுக்கும் தலைவராக திகழ்ந்தார். அவர் எடுத்துரைத்த சட்டங்கள் ஷரியத் எனப்படுகிறது. நபிகள் நாயகம் தனது ஆட்சியில் அனைத்து மத மக்களையும் அரவணைத்தார். அனைவருக்கும் வாழ்வுரிமை உண்டு என்றார். எல்லோரையும் ஒரே குடிமக்களாக பார்த்தார். இறக்கும் போது ஏழையாக இருந்தார். ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்று என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்து சென்றார். இவ்வாறு தா.பா அவர்கள் பேசியதும் கூட்டம் கரவொலி எழுப்பியது. மேலும் மத்திய அரசின் மக்கள் விரோத
கோவை மஜக சார்பில் பொதுசிவில் சட்டத்தை கண்டித்து எழுச்சிப் பொதுக்கூட்டம்…
நேற்று ஞாயிறன்று மாலை கோவை குனியமுத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக, பொதுசிவில் சட்டத்தை கண்டித்து எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, மஜக துணைப் பொதுச்செயலாளர் மவ்லவி. மைதீன் உலவி, மாநில செயலாளர் சுல்தான் அமீர், துணை செயலாளர் கோவை. பஷீர், கோவை ஐக்கிய ஜமாத் தலைவர் A.R பஷீர் ஹாஜியார், குனியமுத்தூர் பள்ளி தலைமை இமாம் மவ்வலி அப்துல் மாலிக் சிராஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பொதுக்கூட்ட மேடைக்கு கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. பொது சிவில் சட்டத்திற்கு எதிராகவும், மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற குளறுபடி அறிவிப்பை கண்டித்தும் உரைகள் அமைந்தது. மேலும் பிடல் காஸட்ரோ மற்றும் V.P சிங் (27/11) ஆகியோரின் நினைவுகளை போற்றி தலைவர்கள் உரையாற்றினர். இறுதியாக மஜகவில் , பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு அமைப்புகளிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு கோவை தெற்கு மாவட்டம்.