ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நபிகள் நாயகம்! மதுக்கூரில் தா.பாண்டியன் பேச்சு!

img-20161231-wa0041

img-20161231-wa0042

img-20161231-wa0043

இன்று தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் தா.பாண்டியன் அவர்களின் உரையின் சுருக்கம் பின்வருமாறு.

இயேசு தன் கொள்கைகளை மட்டும் கூறினார். அவரது சீடர்கள் அதை பரப்பினார்கள். ஆனால் முகம்மது நபி அவர்கள் இறைவன் அருளியதாக குர் ஆனின் கருத்துக்களை கூறினார். இது வரை அரேபிய மொழியில் இது போன்ற ஒரு இலக்கிய நூல் இல்லை என்று அமெரிக்க அறிஞர் கூறினார்.
நபிகள் நாயகம் மார்க்கத்தை போதித்து ஒரு அரசையும் உருவாக்கி இரண்டுக்கும் தலைவராக திகழ்ந்தார். அவர் எடுத்துரைத்த சட்டங்கள் ஷரியத் எனப்படுகிறது.

நபிகள் நாயகம் தனது ஆட்சியில் அனைத்து மத மக்களையும் அரவணைத்தார். அனைவருக்கும் வாழ்வுரிமை உண்டு என்றார். எல்லோரையும் ஒரே குடிமக்களாக பார்த்தார். இறக்கும் போது ஏழையாக இருந்தார். ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்று என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்து சென்றார்.

இவ்வாறு தா.பா அவர்கள் பேசியதும் கூட்டம் கரவொலி எழுப்பியது.
மேலும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும், ரூபாய் நோட்டு குறித்த குளறுபடிகளையும் கடுமையாக கண்டித்து பேசினார்.

பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு கூடாது என்று வலியுறுத்தி பேசியவர் பாஜக வின் மதவாதபோக்கை கண்டித்து பேசினார்.

அரசியல்நிர்ணய சபையில் மதச்சார்பின்மை குறித்து நடைபெற்ற விவாதங்கள் குறித்து வரலாற்றுபூர்வமாக பேசினார் .

நாம் வகுப்புவாதிகளைதான் வெறுக்கிறோம் விவேகானந்தர், வள்ளலார் போன்றோரை நாம் மதிக்கிறோம். இந்த நாடு இப்போது பண்டாரங்கள் கையில் சிக்கிவிட்டது! வெள்ளையர்களை விரட்டியடித்த நாம், இவர்களையும் விரட்டியடிக்கவேண்டும். எனவே மதநல்லிணக்கம் பேசும் அனைவரும் நாட்டில் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மாநில விவசாய அணிசெயலாளர் நாகை முபாரக் மாவட்ட செயலாளர் அஹமதுகபீர் மாவட்ட பொருளாளர் ஜபார்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா,தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், மாவட்ட துணைச்செயலாளர் மொய்தீன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல் :

மஜக ஊடக பிரிவு
தஞ்சை (தெற்கு)
30_12_16