தமுமுக தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் மஜகவில் இணைந்தார்!

தமுமுக தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் அவர்கள் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தன்னை மஜக வில் இணைத்து கொண்டார். அவருடன் கடலூர் நகர மமக செயலாளர் சிராஜ்தீன், பாதிரி குப்பம் ஜமாத் செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோரும் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோப்புதுறை ஷேக் அப்துல்லா, நெய்வேலி ஷாஜகான், சதக்கதுல்லா, மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
மஜக ஊடக பிரிவு.