கோவை மஜக சார்பில் பொதுசிவில் சட்டத்தை கண்டித்து எழுச்சிப் பொதுக்கூட்டம்…

image

image

image

நேற்று ஞாயிறன்று மாலை கோவை குனியமுத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக, பொதுசிவில் சட்டத்தை கண்டித்து எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA,
மஜக துணைப் பொதுச்செயலாளர்
மவ்லவி. மைதீன் உலவி, மாநில செயலாளர் சுல்தான் அமீர், துணை செயலாளர் கோவை. பஷீர்,
கோவை ஐக்கிய ஜமாத் தலைவர் A.R பஷீர் ஹாஜியார், குனியமுத்தூர் பள்ளி தலைமை இமாம் மவ்வலி அப்துல் மாலிக் சிராஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்பொதுக்கூட்ட மேடைக்கு கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

பொது சிவில் சட்டத்திற்கு எதிராகவும், மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற குளறுபடி அறிவிப்பை கண்டித்தும் உரைகள் அமைந்தது.

மேலும் பிடல் காஸட்ரோ மற்றும் V.P சிங் (27/11) ஆகியோரின் நினைவுகளை போற்றி தலைவர்கள் உரையாற்றினர்.

இறுதியாக மஜகவில் , பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில்
50க்கும் மேற்பட்டோர் பல்வேறு அமைப்புகளிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்.

தகவல்;
மஜக ஊடகப் பிரிவு
கோவை தெற்கு மாவட்டம்.