You are here

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பெயரில் ஆராய்ச்சி நூலகம்… மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…


பிப்.27,

சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு மெரினா கடற்கரை எதிரே உள்ள, ஆங்கிலேய அரசால் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இடத்தில், அவருக்கு சொற்பொழிவு கூடத்துடன் கூடிய ஆராய்ச்சி நூலகம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வரிடம் இக்கோரிக்கை மனுவை அளித்தவர், மீனவ சமூகத்தில் பிறந்து, பொதுவுடைமை இயக்க தலைவராக பரிணமித்து, பெரியாராலும், பேரறிஞர் அண்ணாவாலும் புகழப்பட்ட அவருக்காக இக்கோரிக்கையை வைப்பதாக கூறினார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#சட்டப்பேரவை_வளாகம்.
26.02.2021

Top