தா பாவின் அரசியலை வலிமைபடுத்துவதே அவருக்கான உண்மையான அஞ்சலி! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!


பிப் 26

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.தா.பாண்டியன் அவர்களின் உடல் கட்சி தலைமையகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் பொருளாளர் ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, தைமியா ஆகியோர் சென்று அவரது உடலை பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மு.வீரபாண்டியன், லெனின் ஆகியோரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் , ” தோழர் தா.பா. முன்னெடுத்த அரசியலை வலிமைப்படுத்துவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் ” என கூறினார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
26.02.2021