
சென்னை.பிப்.17.,மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சென்னை மாநகராட்சியின் 60-வது வார்டு வேட்பாளராக அ.சையது ஹசன் அலி அவர்கள் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் தலைமையில் 60-வது வார்டிற்கு உட்பட்ட லிங்கி செட்டி தெரு, தம்பு செட்டி தெரு, மண்ணடி தெரு, மூர் தெரு, செம்புதாஸ் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு போன்ற பகுதிகளில் வேட்பாளர் ஹசன் அலி அவர்களுக்காக பெருந்திரளான மஜகவினர் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
இப்பிரச்சாரத்தில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், துறைமுகம் செயல்வீரர்கள் சிக்கந்தர் பாட்சா, அஸ்கர், அம்ஜத் ராயபுரம் நைனார் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு
#60_வது_வார்டு_தேர்தல்_பணிக்குழு
16.02.2022