நெல்லை .பிப்.20., நெல்லை(மேற்கு) மாவட்டம் புளியங்குடியில் நேற்று பிப்.19 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசின் மக்கள் கொள்கைகளை கண்டித்து மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மஜகவின் முதல் பொதுக்கூட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. அனைவருக்கும் உற்சாகம் தந்தது சமூகத்தின் பலதரப்பினரும் குறிப்பாக 90சதவிகிதம் உள்ளூர் மக்கள் பங்கேற்றது இதன் சிறப்பம்சம்மாகும். இதில் மஜக பொதுசெயளாலர் M.தமீமுன் அன்சாரி MA, MLA, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீது M.com, மாநில செயளாலர் N.A.தைமியா ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள். இதில் மாவட்ட செயளாலர் தென்காசி i.மீரான், தூத்துக்குடி மாவட்ட செயளாலர் ஜாஹீர் உசேன், விருந்துநகர் மாவட்ட செயளாலர் இப்ராகிம், நெல்லை கிழக்கு மாவட்ட செயளாலர் கலில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) நெல்லை மேற்கு 20.02.17
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
புளியங்குடியில் “மதவாத மோடிஅரசை கண்டித்து மஜகவின் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்”
நெல்லை.பிப்.19., நெல்லை மாவட்டம் புலியங்குடியில் இன்று 19-02-2017 ஞாயறு மாலை 6.30 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்" நடைபெற உள்ளது. எழுச்சியுரை: M. தமிமுன் அன்சாரி MA. மாநில பொதுச் செயலாளர் மஜக , நாகை சட்டமன்ற உறுப்பினர். S.S. ஹாரூன் ரஷீது M.Com, மாநில பொருளாளர் மஜக சிறப்புரை : K.M.மைதீன் உலவி மாநில இணைப் பொதுச் செயலாளர் மஜக N.A.தைமிய்யா மாநில செயலாளர் மஜக I. மீரான் நெல்லை மாவட்ட செயலாளர் மஜக இடம் : ரஹ்மத் பால்பண்ணை (காயிதே மில்லத் திடல்) தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) நெல்லை மாவட்டம். 19.02.17
இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முப்பெரும் விழா காணும் கோவை மஜக
பிப்.08., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் தெற்கு பகுதியின் ஆலோசனை கூட்டம் இன்று 08/02/2017 மாலை 7-மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் *அப்பாஸ்* அவர்கள் தலைமையேற்க, பொருளாளர் *நிவாஸ்,* துணை செயலாளர்கள் *காஜா, ஜக்கிரியா, ஜெமேஷா* மருத்துவ அணி செயலாளர் *யூசுப்* இளைஞர் அணி செயலாளர் *ஜாபர்,* மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க செயலாளர் *சிராஜ்* ஆகியோர் முன்னிலை வகித்தனர். *இக்கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* 1) வரும் *பிப்ரவரி 28* அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி *சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக கொடி ஏற்றுவது* எனவும். 2) பிப்ரவரி 28 அன்று *இலவச மருத்துவ முகாம்* நடத்துவது எனவும். 3) பகுதிகள் முழுதும் தீவிர *உறுப்பினர்கள் சேர்க்கை* நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பகுதி, கிளை, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) கோவை மாநகர் மாவட்டம் 08/02/2017
சேலம் மஜகவின் குடியரசு தின நிகழ்ச்சி…
ஜன.28., மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட துனை செயலாளர் U.அமீர் உசைன் அவர்களின் தலைமையில் சேலம் முஹமது புறா பகுதியில் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை நாசர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தின உரையாற்றினார்கள். உறையின் போது இந்தியாவில் உள்ள தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேசினார்... பிறகு மாவட்ட செயலாளர் S.இப்ராஹீம் பேசும்போது இந்தியாவின் எல்லை பகுதியில் ஊடுருவும் பாகிஸ்தான் சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிடமிருந்து இந்திய தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்... இதில் மாவட்ட துனை செயலாளர் A.ஷேக் ரபி எல்லோரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட இளைஞரனி செயலாளர் M.A.மஹபூப் அலி நன்றி கூறினார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. சேலம் கிழக்கு மாவட்டம். 28.01.17
மொழி போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம்…
ஜன.25., இன்று சென்னை பெரம்பூரில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் மொழி போர் தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் "மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் திருமங்கலம் சமீம்" அவர்கள் உரையாற்ற உள்ளார். நாள் : 25-01-2017 நேரம் : மாலை 7மணி இடம் : பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்,சென்னை. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-Wing) சென்னை, 25_01_2017