மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் களத்தில் ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி சேர்ந்த பாசமிகு வழக்கறிஞர் அண்ணன், பா.பா.மோகன், அவர்கள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பதாகை ஏந்தி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார் இவர் தொடர்ந்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் களத்தில் பங்கேற்க விருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 18.12.2021
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
கோவை மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை , பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக் கோரி ஜனவரி 8, அன்று கோவை சிறையை முற்றுகையிடும் போராட்ட அறிவிப்பு ; கோவையில் பலதரப்பட்ட மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை ஒழுங்கமைக்கும் வகையில் கோவை மாநகர மஜக நிர்வாகிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் கூட்டம், வசந்தம் மஹாலில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் எழுச்சியுடன் நடைப்பெற்றது. துணைப் பொதுச் செயலாளரும் , போராட்டக் குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாருக், மற்றும் துணைப் பொதுச் செயலாளரும் , போராட்ட குழுவின் துணைத் தலைவருமான AK.சுல்தான் அமீர், ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினர். மாநில துணைச் செயலாளர் கோவை அப்துல்பஷீர், MJTS மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநிலச் செயலாளர் இஷாக் ஆகியோரின் கருத்துரைகளுக்கு பிறகு, நிர்வாகிகளிடம் கருத்து கேட்புகளும் நடைப்பெற்றது. பின்னர் கோவை மாநகரில் மட்டும் 7 ஆயிரம் 10 ஆயிரம் பேரை திரட்டும் வகையில், ஆயத்த நடவடிக்கைகளை பல்வேறு வகையில் முன்னெடுப்பது குறித்து திட்டங்கள்
திருவாரூர் மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது. மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் நிர்வாகிகள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனி ஜெகுபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணைச்செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான நாகை முபாரக் அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். மாவட்டத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும், மேலும் 35 இடங்களில் வரைவது என்றும், 10 பேருந்துகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட இதர வாகனங்களில் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்படுவது என்றும். அதற்காக மக்களைத் திரட்டும் பணிகளை குழுக்கள் அமைத்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா,
ஈரோடு தாவூதியா கல்லூரி முதல்வர் உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத்துடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு..
1952 ஆம் ஆண்டில் ஈரோட்டில் உருவாக்கப்பட்ட தாவூதியா கல்லூரிக்கு இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்தார். அவருடன் மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக் அவர்களும் உடன் வருகை தந்தார். ஹஜ்ரத் அவர்களின் உடல் நலம் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் விசாரித்து நீண்ட காலம் வாழ்ந்து நீங்கள் வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் கூறினார். ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை போராட்டம் குறித்து தான் அறிந்ததாகவும், நல்லபடியாக நடந்தேறிட பிரார்த்திப்பதாகவும் கூறினார். அதன் பிறகு மாநில துணைச் செயலாளர் பாபு ஷஹின்ஷாவின் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறிட அவர் வீட்டிற்கும், முன்னாள் மாவட்ட பொருளாளர் முகம்மது அலி அவர்களின் மறைவையொட்டி அவரது வீட்டிற்கும், சமீபத்தில் மறைந்த pfi மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினார். இச்சந்திப்புகளின் போது ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஷஃபிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் எக்ஸானுல்லா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, ரியாஸ், பக்கீர், ஜாபர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திலிப் குமார், MJTS மாவட்ட செயலாளர் சபர் அலி, MJVS
ஜனவரி_08 போராட்டகளம் சூடு பிடிக்கிறது…ஈரோடு சேலம் கரூர் மாவட்டங்களிலிருந்து 5ஆயிரம்பேர் திரள சூளுரை…
ஈரோட்டில் சேலம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கரூர் மாவட்ட மஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார். அவருடன் துணைப் பொதுச் செயலாளரும், ஜனவரி - 8 முற்றுகை போராட்ட குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாரூக், அவர்களும் பங்கேற்றார். இதில் இம்மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ஜனவரி 8 கோவை சிறை முற்றுகை போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட எங்கும் எழுதப்பட்டு வரும் சுவர் விளம்பரங்கள் குறித்து மாவட்ட செயலாளர்கள் விளக்கினர். வழிபாட்டு தலங்கள், கடை வீதிகள், கல்லூரிகள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய மையங்களில் விளம்பர தட்டிகள் வைப்பது குறித்தும், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் செய்யும் விளம்பர யுக்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிறைவாக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலிருந்து 3 ஆயிரம் பேரையும், சேலம், கரூர் மாவட்டங்களிலிருந்து குறைந்தது 2 ஆயிரம் பேரையும் திரட்டும் வகையில் வாகனங்களை முன் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. பரப்புரைக் குழு, விளம்பரக் குழு, அழைப்பிதழ் குழு, வாகன முன்