ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகநாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக விருது நகர் மாவட்டம் அனைத்து கட்சியினர் சார்பில் ஸ்டேட் பேங்க் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் தலைமையில் மஜக வினர் பங்கேற்றனர் மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்றனர். #Istandwithfarmers #mjkstandwithfarmers தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 27.09.2021
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
விழுப்புரம் மஜக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!
மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் J.S.M.சௌகத் அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் S.A.அபுதாஹிர், P.R.S. நாசர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் R.அஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #விழுப்புரம்_தெற்கு_மாவட்டம் 27.09.2021 #IStandWithFarmers #MjkStandWithFarmers
குடந்தையில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! மஜகவினர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் 9 மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது இப்ராஹிம், மேலக்காவேரி பகுதி செயலாளர் அபுதாஹிர், மஜக ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 27.09.2021 #IStandWithFarmers #MjkStandWithFarmers
நெல்லை மேலப்பாளையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜகவினர் ஆர்ப்பாட்டம்..!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத்பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒண்றினைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட விவசாய அணி சார்பாக ஆதரவு போராட்டம் மேலப்பாளையம் சந்தைமுக்கு ரவுண்டானாவில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார், மாவட்டதுணை செயலாளர்கள் இரா.முத்துக்குமார், செய்யதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜாஹிர் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்பாட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் கண்டன உரை நிகழ்த்தினர், மேலும் தோழமை கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஜக மாவட்ட அணி நிர்வாகிகள் N.அப்பாஸ், ஹபிபுல்லாஹ், டில்லி சம்சு, பகுதி நிர்வாகிகள் ஆதிமூலம், ஐ.டி.ஐ. சங்கர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். #MjkStandWithFarmers #IStandWithFarmers தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 27-09-2021
அறந்தாங்கி அருகே அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! மஜகவினர் பங்கேற்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கல்லணைக் கால்வாய் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு துவக்கி வைத்தார். டெல்லியில் 9 மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், கொள்கைபரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 27.09.2021 #IStandWithFarmers #MjkStandWithFarmers