நெல்லை மேலப்பாளையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத்பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒண்றினைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட விவசாய அணி சார்பாக ஆதரவு போராட்டம் மேலப்பாளையம் சந்தைமுக்கு ரவுண்டானாவில் நடைபெற்றது.

தலைமை செயற்குழு உறுப்பினர் நிலா இக்பால் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார், மாவட்டதுணை செயலாளர்கள் இரா.முத்துக்குமார், செய்யதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜாஹிர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆர்பாட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் கண்டன உரை நிகழ்த்தினர், மேலும் தோழமை கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

நிறைவாக மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஜக மாவட்ட அணி நிர்வாகிகள் N.அப்பாஸ், ஹபிபுல்லாஹ், டில்லி சம்சு, பகுதி நிர்வாகிகள் ஆதிமூலம், ஐ.டி.ஐ. சங்கர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

#MjkStandWithFarmers
#IStandWithFarmers

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
27-09-2021