அறந்தாங்கி அருகே அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! மஜகவினர் பங்கேற்பு..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கல்லணைக் கால்வாய் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு துவக்கி வைத்தார்.

டெல்லியில் 9 மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், கொள்கைபரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
27.09.2021

#IStandWithFarmers #MjkStandWithFarmers