சென்னை, மார்ச்.07., கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட பாட திட்டத்தின் அடிபடையில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயமாக கற்று தேர்வு எழுத வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதனால், சிறுபான்மை மக்களின் மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் இச்சட்டத்தால் மொழி சிறுபான்மை பள்ளிகூட நிர்வாகிகள், மாணவர்கள் சார்பாக சென்னை உயர் நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்குதொடர்ந்த பள்ளி கூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தமிழக அரசுக்கு சென்ற வாரம் உத்தரவிட்டது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பள்ளிகூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடராத பள்ளி கூடங்களுக்கும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உருது மட்டும் இதர சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பாதிக்கபட்ட மாணவர்களுக்கு
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
மெரினா போராட்ட மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம்
சென்னை.மார்ச்.05., தமிழகத்தில் பெரும் மாணவர் புரட்சியை உருவாக்கிய ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்திற்க்கு பின் போராட்டத்தை வழிநடத்திய மாணவர் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டத்தின் முதல் அமர்வு நேற்று (04.03.2017) சென்னையில் நடைப்பெற்றது. மாணவர் இந்தியா சார்பாக மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் பங்கேற்றனர். இதில் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து "தமிழக மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு" (Confederation Of Tamilnadu Students Organization-COTSO) உருவாக்கப்பட்டது.கூட்டமைப்பின் அடுத்த அமர்வில் கொள்கைகள்,செயல்பாடுகள் குறித்து இறுதி முடிவு வகுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஊடகபிரிவு : மாணவர் இந்தியா தலைமை
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாக கூட்டம்…
திண்டுக்கல்.பிப்.25., திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் நிர்வாக கூட்டம் நேற்று 24-02-2017 இரவு 09:00 மணியலவில் நடைபெற்றது. இக்கூட்டம் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது ஃபிர்தெஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் நவ்பல், மாவட்ட துணை செயலாளர் முனாப் தீன் முன்ணிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா கலந்து கொண்டார்கள். இதில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன... மாணவர்களுக்கான கருத்தரங்கம் எதிர்வரும் 12/03/2017 அன்று காலை 10மணிக்கு நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டுள்ளன. தகவல் : மாணவர் இந்தியா, தகவல் தொழில்நுட்ப அணி. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் 25.02.2017
மாணவர் இந்தியா-நியமன அறிவிப்பு…
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளராக : T.முஹம்மது ஃபிர்தௌஸ் MCA #56,ஜின்னா நகர், பேகம்பூர், திண்டுக்கல்-02 தொடர்பு எண்: 82209 03902 திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் இந்தியா பொருளாளராக : முஹம்மது நவ்ஃபல்.BE #32, நதர்ஷா தெரு, பேகம்பூர், திண்டுக்கல்- 2 தொடர்பு எண்: 9791569533 ஆகியோர் மாணவர் இந்தியா சார்பில் நியமனம் செய்யப் படுகின்றனர். அமைப்பின் பகுதி, கிளை நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவண்: முஹம்மது அஸாருதீன், மாநில செயலாளர், மாணவர் இந்தியா. 03.02.17
காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் “மாணவர் இந்தியா” ஒருங்கிணைத்த கருத்தரங்கம்…
ஜனவரி 30 தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை "பயங்கரவாத எதிர்ப்பு நாள்" என்ற தலைப்பில் #மாணவர்_இந்தியா ஒருங்கிணைத்த கருத்தரங்கம் 30-01-2017 இன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் மாநில செயலாளர் அசாருத்தீன்.MBA., தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளாளர் ஜாவித்.MBA., வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் அப்ஸர் சையத்.MBA., தீர்மானங்களின் மீதான உரையை வழங்க, மஜக மாநில பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி.MLA., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் #சரத்குமார்.Ex.MLA., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராசிரியர் #அருணன், காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் #ஜோதிமணி, மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். இறுதியாக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது. MBA., நன்றிகூறினார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, சென்னை. 30.01.17