பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் மஜக மாநிலச் செயலாளர் & மாணவர் இந்தியா நிர்வாகிகள் சந்திப்பு…

image

சென்னை, மார்ச்.07., கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட பாட திட்டத்தின் அடிபடையில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயமாக கற்று தேர்வு எழுத வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது.

இதனால், சிறுபான்மை மக்களின் மொழிகளான
உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் இச்சட்டத்தால் மொழி சிறுபான்மை பள்ளிகூட நிர்வாகிகள், மாணவர்கள் சார்பாக சென்னை உயர் நிதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது.

வழக்குதொடர்ந்த பள்ளி கூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத சென்னை
உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தமிழக அரசுக்கு சென்ற வாரம் உத்தரவிட்டது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த
பள்ளிகூடங்களுக்கு மட்டும் சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு,
மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுத  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி  தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

வழக்கு தொடராத பள்ளி கூடங்களுக்கும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உருது மட்டும் இதர சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுத தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா
தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

பாதிக்கபட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனார்கள்.

மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் A.முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் S.பஷீர் அஹமத், தென் சென்னை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் N.கபிர் அஹமத்  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்..

ஊடகபிரிவு
மாணவர் இந்தியா
சென்னை
07/03/2017