கடலூர்.மே.15., இன்று தமுமுகவின் மாணவர் அணியான "சமூக நீதி மாணவர்" இயக்கத்தின் கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை கூண்டோடு கலைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். அனைவருக்கும் மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் வரவேற்று கட்சியின் அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகி மன்சூர், மங்களம்பேட்டை நகர செயலாளர் ஃபைசல் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம் 15-05-2017
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம் : முதல் நாள் நிகழ்வு…
சென்னை.மே.13., இன்று "மாணவர் இந்தியா" சார்பில் மே.13,14 ஆகிய தேதிகளில் திறன் வளர்க்கும் சிறப்பு பயிற்சி முகாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிழக்கு கடற்கரை மாமல்லபுரத்தில் பண்ணை வீட்டில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாலிமர் டிவி செய்தி ஆசிரியர் ரகுமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தமிழ்நாடு மாணவர் இயக்கத் தலைவர் இளையராஜா, மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா, மாநிலத் துணைச் செயலாளர் அனீஸ் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை இன்று நாடத்தினர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர் இந்தியா மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர். நாளையும் தொடரும்...... தகவல்; ஊடகப் பிரிவு மாணவர் இந்தியா தலைமை. சென்னை 13.05.2017
மாணவர் இந்தியா தலைமையக நியமன அறிவிப்பு…
மாணவர் இந்தியா தலைமையக நியமன அறிவிப்பு…
மாணவர் இந்தியா காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் நியமனம். J.தமீம் அன்சாரி B.E (கொளப்பாக்கம்) அலைப்பேசி-9841186572 மாணவர் இந்தியா நிர்வாகிகளும், தோழர்களும் இந்த சகோதரருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம். இவண், முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா. 12.05.2017
மாணவர் பயிற்சி முகாம் பணிகளில் மாணவர் இந்தியா.
வருகின்ற மே 13,14 ஆகிய இரு தினங்கள் சென்னை, மாமல்லபுரத்தில் மாணவர் இந்தியா சார்பில் சிறப்பு திறன் மேம்பாடு முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 250 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 75 மாணவர்களுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் வகுப்பெடுக்க உள்ளனர். முகாம் நடத்துவதற்கான பண்ணை வீட்டை இன்று (08.05.2017) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், காஞ்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சர்தார் மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபிக் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : ஊடக பிரிவு #மாணவர்_இந்தியா 08.05.2017