ஜன.23.,
கோவை வருகை தந்த தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை AK.சுல்தான் அமீர், அவர்கள் சந்தித்தார்.
இச்சந்திப்பில் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான மனுவினை முதல்வரிடம் மஜக துணை பொதுச்செயலாளர் அளித்தார்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது தமிழக சிறைகளில் உள்ள 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத, பேதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
உயர்நீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்ட 12 நபர்களை நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட வேண்டும்.
பரோலில் வரும் சிறைவாசிகளுக்கு வழி காவல் இல்லாத பரோல் வழங்கவேண்டும்.
போன்ற பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் அளிக்கப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழக முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
இது தொடர்பாக ஏற்கனவே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறைவாசிகள் குடும்பத்தாரை அழைத்து சென்று அமைச்சர் SP.வேலுமணி, அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
23.01.2021