(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிடும் வாழ்த்து செய்தி ) பழம்பெரும் அரசியல் பேரியக்கமான #திராவிட_முன்னேற்றக்_கழகத்தின் தலைவராக அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதி, மதச்சார்பின்மை, தமிழர் மேம்பாடு, மாநில உரிமைகள் உள்ளிட்ட அரசியல் கொள்கைகள் தூக்கி பிடிக்கும் திமுகவின் தலைவராக அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது அவரது உழைப்புக்கும், உணர்வுக்கும் கிடைத்த பரிசாகும். தமிழகத்தின் நலன்களையும், இந்திய ஒன்றியத்தின் வளங்களையும் பாதுகாக்கும் அரசியல் கடமையை அவர் தலைமையில், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் , பேரா.அன்பழகன் ஐயாவின் துணையோடு #திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. மேலும், திமுக வின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அண்ணன் துரைமுருகனுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களை ஒரு மனதாக தேர்வு செய்த திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 28.08.2018
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
கேரளா வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு..! பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA, முன்னிலையில் ஒப்படைத்தனர்..!!
கோவை.ஆக.27., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட செல்வபுரம் வடக்கு 77வது வார்டு சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. வசூல் செய்யப்பட்ட ரூபாய் 62.500 அறுபத்தி இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரிMLA. முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகளிடம் கிளை செயலாளர் இப்ராஹீம், பொருளாளர் அலி, துணை செயலாளர்கள் பீர்முகம்மது, அபு, நெளபல், மருத்துவ அணி செயலாளர் அபுதாஹீர், ஆகியோர் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மத்திய பகுதி செயலாளர் பூ.காஜா, 77வது வார்டு முன்னாள் செயலாளர் சலீம், ஆகியோர் கலந்து கொண்டனர் .. தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 26.08.18
கோவை ஐக்கிய ஜமாத் நிகழ்ச்சி ! அமைச்சர் வேலுமணி, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
கோவை.ஆக.26., கோவையில் ஐக்கிய ஜமாத் சார்பில் 10 வது மற்றும் +2 தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்ற 300 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழாவும், ஹஜ் மானியம் 6 கோடி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் இணைந்து போத்தனூரில் நடத்தப்பட்டது. #தமிழக_ஹஜ்_கமிட்டி தலைவர் ஜப்பார் ஹாஜியார் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, உள்ளாட்சி துறை #அமைச்சர் #SP_வேலுமணி, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் பங்கேற்று 8 லட்சம் மதிப்பிலான காசோலைகளை 300 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். இதில் கோவை ஐக்கிய ஜமாத் சார்பில் ஹஜ் மானியமாக வருடத்துக்கு தலா 6 கோடி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் வேலுமணிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கப்பட்டது. இதில் பேசிய தமிமுன் அன்சாரி அவர்கள், தமிழக அரசு சிறுபான்மையினருக்கு கொடுத்து வரும் உதவிகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் நன்றி கூறினார். கோவை மக்கள் அமைதியை விரும்பக்கூடிய முதிர்ச்சியானவர்கள் என்றும் பாராட்டியவர், தான் அடிக்கடி கோரிக்கை வைக்கும் ,கோவை மக்களின் முக்கியமான விருப்பத்தை அமைச்சர் SP.வேலுமணி அவர்கள் முதல்வரிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், அவர்களின் கண்ணீர்
முக்கொம்பு அனணயை பார்வையிட்டார் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி..!
திருச்சி.ஆக.26., திருச்சி அருகே சமீபத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த முக்கொம்பு அணையை இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு நடைபெற்று வரும் மறு கட்டமைப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பிறகு, அங்கு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது... ஆங்கிலேயர்கள் 182 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தமிழக நலனுக்காக துர நோக்கோடு கட்டிய தடுப்பு அணை இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கட்டமைப்புகளை காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும். கடந்த 25, 30 ஆண்டுகளாக நடைப்பெற்ற மணல் கொள்ளைகள் இன்று இது போன்ற கட்டமைப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதிகளுக்கு ஆற்று நீர் போய் சேருவதிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, காவிரி சமவெளியில் மணல் அள்ள நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். இதற்கு மாற்றாக மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய உள்ள 11 நிபந்தனைகளை தளர்த்தி மணல் இறக்குமதியை எளிமையாக்க வேண்டும். அடுத்த மழை ஆண்டுக்குள் முதல்வர் எடப்பாடியார் 1000 கோடி மதிப்பில் அறிவித்துள்ள 62 தடுப்பணைகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். இந்த தடுப்பணைகளை தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் காவிரியின்
மஜகவினர் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இரண்டாம் கட்ட ஆய்வு..! நிவாரண உதவிகளை கிடைக்காத பகுதியில் இன்று முதல் பணிகள் துவக்கம்..!!
தேனி.ஆக.26., #மனிதநேய_ஜனநாயக_கட்சி தேனி மாவட்ட நிர்வாகிகள் நேற்று (25.08.2018) கடந்த சில நாட்களாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு சரிவர நிவாரணம் செல்லாத பகுதிகள் ஆய்வுசெய்தனர். இதில் #இடுக்கி_மாவட்டம் வண்டிப்பெரியார், வள்ளக்கடவு, மஞ்சுமலை, கக்கிகாபள்ளி, நல்லதம்பிகாலனி ஆகிய பகுதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் #கம்பம்_கரீம் அவருடைய தலைமையில், மாவட்ட செயலாளர் #ரியாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் #கம்பம்_கலில் மற்றும் கம்பம் முன்னால் ஜமாஅத் துணை செயலாளர் #சையது_அபுதாஹிர் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக இன்று முதல் #மஜக_மாநில_பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி MA.MLA அவர்கள் ஆலோசனையின் பேரில், மாநில துணைபொதுச்செயலாளர் #மன்னை_செல்லச்சாமி மற்றும் #மாநில_இணை_பொதுச்செயலாளர்_மைதீன்_உலவி ஆகியோர் வழிகாட்டுதலின்படி நிவாரன உதவிகள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அணிஸ், கம்பம் நகர செயலாளர் அஜ்மீர், நிர்வாகிகள் சபீக்ராஜா, ஷாஜஹான் கம்பம் மாணவர் இந்தியா அசரப் ஒலி ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #வெள்ள_நிவாரண_பணி_குழு #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தேனி_மாவட்டம். 25.08.2018