திருச்சி.ஆக.26., திருச்சி அருகே சமீபத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த முக்கொம்பு அணையை இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இன்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது அங்கு நடைபெற்று வரும் மறு கட்டமைப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பிறகு, அங்கு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது…
ஆங்கிலேயர்கள் 182 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தமிழக நலனுக்காக துர நோக்கோடு கட்டிய தடுப்பு அணை இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது போன்ற கட்டமைப்புகளை காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும்.
கடந்த 25, 30 ஆண்டுகளாக நடைப்பெற்ற மணல் கொள்ளைகள் இன்று இது போன்ற கட்டமைப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதிகளுக்கு ஆற்று நீர் போய் சேருவதிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, காவிரி சமவெளியில் மணல் அள்ள நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
இதற்கு மாற்றாக மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய உள்ள 11 நிபந்தனைகளை தளர்த்தி மணல் இறக்குமதியை எளிமையாக்க வேண்டும்.
அடுத்த மழை ஆண்டுக்குள் முதல்வர் எடப்பாடியார் 1000 கோடி மதிப்பில் அறிவித்துள்ள 62 தடுப்பணைகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
இந்த தடுப்பணைகளை தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் காவிரியின் கிளை ஆறுகளில் அதிக அளவில் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
பேட்டியின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், மாநில விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக், திருச்சி மாவட்ட செயலர் இப்ராகிம் ஷா, பொருளாளர் அஷ்ரப், மாவட்ட துணை செயலர் ரபீக். மாணவர் இந்தியா மாவட்ட செயலர் மெய்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#திருச்சி_மாவட்டம்.
26.08.18