கோவை ஐக்கிய ஜமாத் நிகழ்ச்சி ! அமைச்சர் வேலுமணி, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

கோவை.ஆக.26., கோவையில் ஐக்கிய ஜமாத் சார்பில் 10 வது மற்றும் +2 தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்ற 300 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழாவும்,

ஹஜ் மானியம் 6 கோடி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும் இணைந்து போத்தனூரில் நடத்தப்பட்டது.

#தமிழக_ஹஜ்_கமிட்டி தலைவர் ஜப்பார் ஹாஜியார் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, உள்ளாட்சி துறை #அமைச்சர் #SP_வேலுமணி, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் பங்கேற்று 8 லட்சம் மதிப்பிலான காசோலைகளை 300 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

இதில் கோவை ஐக்கிய ஜமாத் சார்பில் ஹஜ் மானியமாக வருடத்துக்கு தலா 6 கோடி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் வேலுமணிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கப்பட்டது.

இதில் பேசிய தமிமுன் அன்சாரி அவர்கள், தமிழக அரசு சிறுபான்மையினருக்கு கொடுத்து வரும் உதவிகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் நன்றி கூறினார்.

கோவை மக்கள் அமைதியை விரும்பக்கூடிய முதிர்ச்சியானவர்கள் என்றும் பாராட்டியவர், தான் அடிக்கடி கோரிக்கை வைக்கும் ,கோவை மக்களின் முக்கியமான விருப்பத்தை அமைச்சர் SP.வேலுமணி அவர்கள் முதல்வரிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், அவர்களின் கண்ணீர் வாழ்த்துக்களும், நன்றியும் உங்களின் பல தலைமுறைகளை வாழ வைக்கும் என்றார்.

அவர் சிறைவாசிகளின் மனித உரிமைகளையும், முன் விடுதலையையும் பேசுகிறார் என்பதை அறிந்து கூட்டம் அரங்கம் அதிர கை தட்டியது.

ஏற்புரை நிகழ்த்திய அமைச்சர் SP.வேலுமணி அவர்கள், முத்தலாக் விஷயத்தில் மஜகவின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நிலைபாடு எடுத்தாகவும், அது போல் தமிழக ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்க வேண்டுமென என்னிடமும், முதல்வர் இடமும் தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார் என்றும், அதை நிறைவேற்றி கொடுத்துள்ளோம் என்றும் பேசினார்.

மேலும் பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க பிள்ளையார் சுழி போட்டதும் தமிமுன் அன்சாரி தான் என்றார்.

முஸ்லிம்களுக்கும், கிரித்தவர்களுக்கும் இந்த அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

சிறைவாசிகள் கோரிக்கை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் கோவை மாநகரை சேர்ந்த ஜமாத்தினர், தொழில் அதிபர்கள், பல்வேறு சமூகங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்,மஜக நிர்வாகிகள் என சகல தரப்பினரும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
26.08.2018