மஜகவினர் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இரண்டாம் கட்ட ஆய்வு..! நிவாரண உதவிகளை கிடைக்காத பகுதியில் இன்று முதல் பணிகள் துவக்கம்..!!

தேனி.ஆக.26., #மனிதநேய_ஜனநாயக_கட்சி தேனி மாவட்ட நிர்வாகிகள் நேற்று (25.08.2018) கடந்த சில நாட்களாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு சரிவர நிவாரணம் செல்லாத பகுதிகள் ஆய்வுசெய்தனர்.

இதில் #இடுக்கி_மாவட்டம் வண்டிப்பெரியார், வள்ளக்கடவு, மஞ்சுமலை, கக்கிகாபள்ளி, நல்லதம்பிகாலனி ஆகிய பகுதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் #கம்பம்_கரீம் அவருடைய தலைமையில், மாவட்ட செயலாளர் #ரியாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் #கம்பம்_கலில் மற்றும் கம்பம் முன்னால் ஜமாஅத் துணை செயலாளர் #சையது_அபுதாஹிர் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக இன்று முதல் #மஜக_மாநில_பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி MA.MLA அவர்கள் ஆலோசனையின் பேரில், மாநில துணைபொதுச்செயலாளர் #மன்னை_செல்லச்சாமி மற்றும் #மாநில_இணை_பொதுச்செயலாளர்_மைதீன்_உலவி ஆகியோர் வழிகாட்டுதலின்படி நிவாரன உதவிகள் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அணிஸ், கம்பம் நகர செயலாளர் அஜ்மீர், நிர்வாகிகள் சபீக்ராஜா, ஷாஜஹான் கம்பம் மாணவர் இந்தியா அசரப் ஒலி ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#வெள்ள_நிவாரண_பணி_குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தேனி_மாவட்டம்.
25.08.2018