சென்னை.ஆக.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ரவூப் ரஹிம், பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்த ₹53,500 ரூபாயை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் மஜக தலைமையகத்தில் வைத்து நிவாரண நிதியை ஒப்படைத்தனர். கேரளா வெள்ளத்திற்க்காக மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் முதல் கட்டமாக வசூல் செய்யப்பட்டது. இதில் திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகிகள், துறைமுக பகுதி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம் 28.08.2018
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
மாணவர் இந்தியா சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் சேகரிப்பு..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஒப்படைப்பு..!!
சென்னை.ஆக.29., #மாணவர்_இந்தியா அமைப்பின் சார்பாக வசூல் செய்த வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் மாணவர் இந்தியா பொறுப்பாளர் தைமிய்யா மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது ஆகியோர் ஒப்படைத்தனர். தகவல்; #வெள்ள_நிவாரண_பணி_குழு #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையாகம் 29.08.2018
மஜக சார்பில் கேரளா முகாம்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது..! மஜக இணை பொதுச்செயலாளர் கொடியசைத்து வாகனங்களை அனுப்பிவைத்தார்கள்..!!
தேனி.ஆக.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி மாநில தலைமையகம் சார்பில் இன்று 29/8/2018 காலை 10 மணியளவில் கம்பம் மஜக தேனி மாவட்ட அலுவலகத்தில் நிவாரண பொருட்களை அனுப்பிவைப்பு. #மஜக_பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MA_MLA அவர்கள் ஆலோசனையின் பேரில் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முதல் கட்டமாக #கட்டபனை முகாம்களுக்கு தேவையான சுமார் 3லட்சம் மதிப்பிலான பொருட்களும், இரண்டாம் கட்டமாக #வண்டிப்பெரியார் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 3ம் கட்டமாக இன்று #மூனார் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குசுமார் 5லட்சம் மதிப்பிலான அரிசி, பாய், தண்ணீர் டப், குடிநீர் கேன், சீனி, உப்பு, எண்ணெய், பிஸ்கட், ரஸ்க், நாப்கின், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.. இந்நிகழ்வில் நிவாரண பொருட்கள் கொண்ட வாகனங்களை இணை பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ், தேனி மாவட்ட துணை செயலாளர் கம்பம் கலில் மற்றும் கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் கம்பம் நகர துணைசெயலாளர் அன்சர், மற்றும் நிர்வாகிகள் சபீக்ராஜா, ஷாஜஹான், இளைஞரணி சேர்ந்த அணிஸ், சேக்,
மஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக பொதுச்செயலாளரிடம் ஒப்படடைப்பு..!!
சென்னை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி மாநில துணைச் செயலாளர் ஷமீம் அகமது அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் அனவர் மற்றும் மாவட்ட பொருளாளர் அக்பர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகபர் சாதிக் ஆகியோர் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்த 31,000 ரூபாயை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் மஜக தலைமையகத்தில் நிவாரண நிதியை ஒப்படைத்தனர். இதில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மீனவரனி மாநில செயலாளர் பார்த்திபன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சையது அபுதாஹிர் , யூசுப் , ரஹ்மான் , பெரம்பூர் பகுதி செயலாளர் அப்துல் ரசீது தொகுதி பொருளாளர் முகம்மது ஹாதி , பகுதி துணைச் செயலாளர் இனாயத்துல்லாஹ், 35 வது வட்ட செயலாளர் தமீம் அன்சாரி 34 வது வட்ட செயலாளர் ரபிக், 35 மாவட்ட துணைச் செயலாளர் நவாஸ், திரு.வி.க நகர் பகுதி செயலாளர் ஹனிப், இளைஞர் அணிச் செயலாளர் யூசுப், தொழிலாளர் அணி ஷாஜஹான் வர்த்தக அணி
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் நாகை MLA சந்திப்பு..!
சென்னை.ஆக.28., சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து தனது தொகுதி மீனவ மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டார். முக்கியமாக நம்பியார் நகரில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அப்பகுதி மீனவர்கள் செலுத்துவதாகவும், இது தொடர்பாக மாவட்ட அமைச்சர் அண்ணன் O.S.மணியன் அவர்களிடமும், தன்னிடமும் மீனவ கிராம பஞ்சாயத்தினர் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். அது போல் நேற்று நாகை - நாகூர் சாலைகள் மேம்பாடு, திருமருகல் ஒன்றியம் மற்றும் நாகை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு சுற்றுலா துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் அவர்களையும் சந்தித்து நாகை மற்றும் நாகூர் கடற்கைரையை மத்திய அரசின் கடலோர மேம்பாட்டு திட்டங்களை பயன்படுத்தி சுற்றுலா துறை மூலம் அழகுப்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டு, திட்ட மதிப்பீடுகளையும் கையளித்தார். மூன்று துறை அமைச்சர்களும் நாகை தொகுதிக்கான இக்கோரிக்கைகளை செயல்படுத்தி தருவதாக தமிமுன் அன்சாரி MLA