திருப்பூர்.ஜுலை.25., திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க #மனிதநேய_ஜனநாயக _கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் இன்று வருகை தந்தார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது கூறியதாது ... தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரியை 50 முதல் 100 சதவீதம் உயர்த்தியிருப்பதை மஜக கண்டிக்கிறது. இதனால் சாமான்ய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள், எனவே தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். OPS அவர்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் போனது குறித்தும் அவரும், அதிமுக தலைமையும்தான் கவலைப்பட வேண்டும் . இப்படி ஒரேயடியாக அடி பணிந்து போவதை தமிழக மக்கள் விரும்பவில்லை, ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டுருக்காது என அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக அரசு எல்லா நிலையிலும் தோல்வியடைந்திருக்கிறது. GST விவகாரத்தில் நாடெங்கிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது, உலகமெங்கும் GSTக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கிறார்கள், தற்போது மலேசியாசியாவில் GST முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது, இந்தியாவில் மொத்த GSTவரியையும் 10 சதவிதத்திற்குள் கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும். திருப்பூரில் GST காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, முதலீட்டாளர்கள் பங்களாதேஷ் நாட்டை நோக்கி
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
MKP கத்தார் மண்டல நிர்வாகிகள் நியமனம்..!
மனிதநேய கலாச்சார பேரவை ( MKP) கத்தார் மண்டலம் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம். #கொள்ளிடம் தைக்கால் சஹாபுதீன் (+974 3151 0792) #தளபதி பைஸல் (எ) திட்டட்சேரி பைஸல் ரஹ்மான் (+974 5503 0802) இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர். 25.07.2018
நோயாளிகளுடன் மஜக தலைவர்கள் மனிதநேய சந்திப்பு!
சென்னை.ஜூலை.24., சென்னை அண்ணா சாலை அரசினர் பல்நோக்கு மருத்துவ மனைக்கு இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி(மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA தலைமையில் மஜக நிர்வாகிகள் தைமியா, நாச்சிக்குளம் தாஜுதீன், சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர்கள் பொறியாளர் சைபுல்லாஹ்,பு துமடம் அனீஸ் ஆகியோர் வருகை தந்து அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர். மருத்துவர்களின் வருகை, நர்ஸ்களின் சேவைகள், தற்போதைய நோயாளர்களின் உடல் நல முன்னேற்றம் குறித்தும் விசாரித்தனர். இது நல்லெண்ண ரீதியான, மனிதநேய சந்திப்பாகும். தமிழகமெங்கும் மஜக வினர் இது போன்ற சந்திப்புகளை மாதம் தோறும் நடத்தினால் , அது உள்ளங்களை பக்குவப்படுத்தும் என்றும்., சிறந்த ஒரு சேவை சார்ந்த மக்கள் சந்திப்பாகவும் அமையும் என்றும் கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்! மஜக கோரிக்கை.!
உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்ட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தமிழக அரசை வலியுறுத்தியது. அதனையொட்டி, இன்று #அமைச்சர்கள் #நிலோபர்_கபில், #வளர்மதி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு அதில் இருந்த உலாமாக்களை அமைச்சர்களிடம் அழைத்து சென்ற மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் உலமாக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். உலமாக்கள் ஒய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும், இது குறித்து முதல்வரை நேரில் சந்தித்து பேசுவதாகவும் கூறினார். அங்கு வந்த உலமாக்கள், தமிமுன் அன்சாரி MLA அவர் களுக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். தகவல்; #இஸ்லாமிய_கலாச்சாரப்_பேரவை (IKP)
பரங்கிமலை ரயில் விபத்து..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்..!!
சென்னை.ஜூலை.24., சென்னை பரங்கிமலை அருகில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பலர் படுகாயமடைந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்ததும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலளார் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் காயம் பட்டவர்களையும், அவர்களது உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் கிசிச்சை குறித்து கேட்டறிந்தர். பிறகு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS அவர்களை சந்தித்து உரிய மேல் சிகிச்சைகளை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தப்போது, ரயில்வே துறை அதிகாரிகளே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், காலை நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் நிதியும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இன்று மதியம் தமிழக முதல்வர் அவர்கள் இவ்விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கியிருப்பது குறிப்பிடதக்கது. பொதுச் செயளாளருடன், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட துனை செயலாளர் பீர் முகம்மது தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் மற்றும் பகுதி