பரங்கிமலை ரயில் விபத்து..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்..!!

சென்னை.ஜூலை.24., சென்னை பரங்கிமலை அருகில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பலர் படுகாயமடைந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலளார் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் காயம் பட்டவர்களையும், அவர்களது உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மருத்துவர்களிடம் கிசிச்சை குறித்து கேட்டறிந்தர். பிறகு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS அவர்களை சந்தித்து உரிய மேல் சிகிச்சைகளை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தப்போது, ரயில்வே துறை அதிகாரிகளே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், காலை நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் நிதியும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இன்று மதியம் தமிழக முதல்வர் அவர்கள் இவ்விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கியிருப்பது குறிப்பிடதக்கது.

பொதுச் செயளாளருடன், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் பிஸ்மி, மாவட்ட துனை செயலாளர் பீர் முகம்மது தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை_மாவட்டம்