சிதம்பரம்.ஆக.05., கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் தமுமுக மற்றும் மமக விலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் இணைந்தனர். இந்நிகழ்வில் பொருளாளர் ஹாரூண் ரஷீது, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜிதீன், ராசுதீன் ,மாவட்ட செயலர் ஜாஹீர், மாவட்ட பொருளாளர் பஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், கொள்ளுமேடு ரியாஸ் , முன்னாள் மாவட்ட பொருளாளர் ஹம்ஜா, அபுதாபி மண்டல நிர்வாகிகள் தையூப், சாதுல்லா, லால்பேட்டை நகர செயலாளர் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மஜக கொடிகளோடு திரளான தொண்டர்களின் வாகன அணிவகுப்பு சிதம்பரம் வீதிகளில் உற்சாகமாக நடைப்பெற்றது. இணைப்பு நிகழ்வை மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் ஒருங்கிணைத்தார். இதில் அனைவரையும் வரவேற்று பேசிய பொதுச் செயலாளர் மு-தமிமுன் அன்சாரி அவர்கள் , நாம் ஒன்றாக ஒரே களத்தில் முன்பு பணியாற்றினோம். இடையில் நமக்குள் சந்திப்புகள் குறைவாக இருந்தது. இப்போது பொது வாழ்வை பொறுத்தவரை மஜக எனும் கல்லூரிக்கு வந்திருக்கிறோம். ஏரியில் நீச்சலடித்து பழகினோம். இப்போது பரந்து விரிந்த பெருங்கடலுக்குள் நீச்சலடிக்கிறோம். எந்த நம்பிக்கையில் நீங்கள் வந்தீர்களோ, அந்த நம்பிக்கையை இந்த தலைமை காப்பாற்றும் என்றார்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
திண்டுக்கல்லில் உற்சாகமாக நடைப்பெற்ற மஜக செயல்வீரர்கள் கூட்டம்!
திண்டுக்கல்.ஆக.02., திண்டுக்கல் மாவட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று உற்சாமாக நடைப்பெற்றது. காலையில் திண்டுக்கல்லில் கல்லுரி மாணவர்கள், இளைநர்களுடன் #மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அரசியல் கலந்துரையாடல் நடத்தினார். தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற நல்லெண்ண சந்திப்பும் நடைப்பெற்றது. மாலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. தொடர்ந்து பொதுச் செயலாளர் அவர்களும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் வாகன ஊர்வலத்தோடு வந்து இரு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தனர். மாலை பேகம்பூரில் நடைப்பெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி , கொள்கை விளக்க அணியை சேர்ந்த பழனி.சாந்து முகம்மது ஆகியோர் கருத்துரை வழங்கினர். பல்வேறு சமூகங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயலாளர் பாஷா (எ) அப்துல் காதர் ஜெய்லானி, பொருளாளர் சர்புதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் பரீத், ஷாகித் கான், ஹரி, மாவட்ட பேச்சாளர் கொடை. உசேன், முனாப்தீன், சாகுல் ஹமீது, ஜவஹர்,
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக : K. நூருல் பிலாலுதீன், S/o.M.முஸ்தபா கமால் #11/25.காயிதேமில்லத்தெரு, பரங்கிப்பேட்டை, கடலூர் தெற்கு. அலைபேசி : 9626595854 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். இவண், #M_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.08.2018
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் AK.போஸ் மறைவு..! மஜக இரங்கல்!
( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் Ak போஸ் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. சட்டசபையில் கட்சி பாகுபாடின்றி அனைவரோடும் பழகும் பண்பாளராக திகழ்ந்தார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தன் பணி காலத்தை நிறைவு செய்யாமலேயே இறந்தது ஒரு சோகமாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அதிமுக நண்பர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA . பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 02.08.2018 (இன்று காலை மஜக சார்பில் அன்னாரது உடலுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்)
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம்..! மத்திய அரசுக்கு மஜக எச்சரிக்கை..!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு பணி, மக்களை பிரிக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் 40 லட்சம் மக்களை இந்நாட்டவர்கள் இல்லை என கூறியிருப்பது அப்பட்டமான வெறித்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. திரிபுரா மாநிலத்தில், பங்களாதேஷிலிருந்து குடியேறியவர்களுக்கு இதே மத்திய அரசு குடியுரிமை வழங்கி மகிழ்கிறது. அவர்கள் ஆதரவோடு திரிபுராவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது. அதே சமயம் அசாமில் 40 லட்சம் பேரை, குறிப்பாக சிறுபான்மை மக்களை குறிவைத்து குடியுரிமை மறுத்திருப்பது பாஜகவின் வெறுப்பு அரசியலை உறுதிப்படுத்துகிறது. இது குறித்து வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்திருக்கும் எச்சரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் அசாமில் 40 லட்சம் மக்களை அகதிகளாக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண். மு.தமிமுன் அன்சாரி M.A.., MLA., பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 01-08-18