தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம்..! மத்திய அரசுக்கு மஜக எச்சரிக்கை..!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு பணி, மக்களை பிரிக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

அசாமில் 40 லட்சம் மக்களை இந்நாட்டவர்கள் இல்லை என கூறியிருப்பது அப்பட்டமான வெறித்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

திரிபுரா மாநிலத்தில், பங்களாதேஷிலிருந்து குடியேறியவர்களுக்கு இதே மத்திய அரசு குடியுரிமை வழங்கி மகிழ்கிறது. அவர்கள் ஆதரவோடு திரிபுராவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கிறது.

அதே சமயம் அசாமில் 40 லட்சம் பேரை, குறிப்பாக சிறுபான்மை மக்களை குறிவைத்து குடியுரிமை மறுத்திருப்பது பாஜகவின் வெறுப்பு அரசியலை உறுதிப்படுத்துகிறது.

இது குறித்து வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்திருக்கும் எச்சரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் அசாமில் 40 லட்சம் மக்களை அகதிகளாக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்.
மு.தமிமுன் அன்சாரி M.A.., MLA.,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
01-08-18