சென்னை.ஜூலை.08., இன்று காவல் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு எதிர்க்கட்சி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை MGR நூற்றாண்டு விழாவையொட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரினார்கள். எப்போதுமே ஆளுங்கட்சியோடு மோதும் ஜெ. அன்பழகன் இன்று இக்கோரிக்கையை சிக்கல் இல்லாத வார்த்தைகளோடு முன்வைத்து போது அனைவரும் ஆச்சர்யத்ததோடு பார்த்தார்கள். இதற்கு பதில் அளித்த மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் பேரறிவாளன் பரோல் குறித்து பரிசிலினையில் இருப்பதாகவும்,10 ஆண்டுகள் நிறைவு செய்த சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் (AGM) மற்றும் அதிகாரிகளிடம் கருத்து கேட்டிருப்பதாகவும், இது குறித்து பரிசிலிப்பதாகவும் கூறினார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி மேஜையை தட்டி ஆதரவளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அவையில் பேசிய முக்கிய பகுதிகள் பின்வருமாறு... மாண்புமிகு பேரவை துணை தலைவர் அவர்களே... இன்றைய தினம் சட்டப்பேரவையில் சிறைவாசிகளின் விடுதலை குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் அளித்த பதில் மகிழ்ச்சியளிக்கிறது. நானும் அண்ணன் தனியரசு, அண்ணன் கருணாஸ் அவர்களும் இக்கோரிக்கையை 15 நாட்களுக்கு
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரம்… தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் முதல்வர் பதில்!
சென்னை.ஜூலை.08., கோயில், பள்ளிவாசல், தேவாலயங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA சபாநாயகரிடம் கொடுத்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களிடமும் பல விளக்கங்களை எடுத்துக் கூறினார். அதாவது கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிகளை 70 டெசிபல் அளவுக்கு பயன்படுத்துவது அல்லது 6 மாத கால அவகாசம் கொடுத்து ஸ்பீக்கர் பாக்ஸ் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது ஆகிய இரண்டில் ஒன்றையாவது பரீசீலிக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (08.07.17) சட்டபேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி தொடர்பாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் கோரிக்கை பரீசீலிக்கப்படும் என பதிலளித்தார். தகவல்: மஜக தகவல் தொழில் நுட்பஅணி. சட்டமன்ற செய்தியாளர் குழு. சென்னை. 08.07.2017
புதிய தலைமுறை விருது வழங்கும் நிகழ்ச்சி…!
சென்னை.ஜூலை.08., புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆறாம் ஆண்டு விழாவையொட்டி கலை, இலக்கியம், சினிமா, தொழில், சமூக சேவை, சுற்றுச் சூழல் உள்ளிட்ட துறைகளில் சாதனைப் படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நந்தனம் டிரேட் சென்டரில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, பேரா. ஜவாஹிருல்லாஹ், தனியரசு MLA, வேல்முருகன், ஆளுர் ஷாநவாஸ், நக்கீரன் கோபால், பேரா. ஹாஜாகனி, மகேஷ் பொய்யாமொழி MLA, கோ.வி.செழியன் MLA, செம்மலை MLA உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன், இலக்கியவாதிகள், IAS, IPS அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கவிஞர் வண்ணதாசன், பேரா. கல்யாணி, பூவுலகின் நண்பர்கள். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் விருதுகளை பெற்றனர். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING சென்னை. 07.07.2017
திரு.முக.ஸ்டாலின் மற்றும் தனபாலுடன் மஜக பொதுச் செயலாளர் சந்திப்பு…!
சென்னை.ஜூலை.06., கண்புரை அறுவை சிகிச்சை செய்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் திரு.முக.ஸ்டாலின் அவர்கள் இன்று அவைக்கு வருகை தந்தார். அவரை முதல்வர் எடப்பாடி அவர்கள் நலம் விசாரித்தார். அதே போல் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் எதிர்க்கட்சி தலைவரின் அறைக்கு சென்று திரு.முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார், அவருடன் தனியரசு MLA அவர்களும் சென்றிருந்தார். கண்ணாடி (Cooling Glass) அணிந்திருந்த அவரைப் பார்த்து இப்போது கண்ணாடி அணிந்தும் இன்னும் அழகாக இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் என தமிமுன் அன்சாரி அவர்கள் குறியதும் திரு.முக.ஸ்டாலின் அவர்கள் சிரித்துவிட்டார். அருகில் இருந்த திமுக MLA க்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிறகு மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சபாநாயகர் அறைக்கு சென்று மருத்துவமனையிலிருந்து திரும்பிய சபாநாயகர் தனபால் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். "ஓய்வில்லாமல் அவைக்கு வந்துவிட்டிர்களோ... இன்னும் ஓய்வுவெடுத்திருக்கலாமே..." என்று கூறினார். தற்போது நலமாக இருப்பதால் வந்துவிட்டேன் என்றார். தகவல்; தகவல் தொழிநுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டமன்ற வளாக செய்தி குழு சென்னை. 06.07.2017
நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
சென்னை.ஜூலை.06., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டமன்றத்தில் "தமிழகத்துக்கு விலக்கு கேட்டு" நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' என்ற அமைப்பு சார்பில் தோழர்.பிரிண்ஸ் கஜேந்திரபாபு உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். அதில் CPM சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, திமுக சார்பில் R.S.பாரதி M.P, விசிக சார்பில் தொல்.திருமாவளவன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு MLA, காங்கிரஸ் சார்பில் ஹிதாயத்துல்லாஹ், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ் MLA உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் நாங்கள் மூவரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என M.தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூறினர். சட்டமன்றத்தில் 'நீட்' தேர்வு குறித்து தான் இரண்டு முறை பேசியதாக தமிமுன் அன்சாரி அங்கு நினைவு கூர்ந்தார். முன்னதாக மேற்கண்ட தலைவர்கள் ஒன்றாக நின்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சென்னை. 06.07.17