SIO (Student’s Islamic Organization of India) சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் 26/10/2016 அன்று நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வியாளர் அஃப்ஸல் ஹூஸைன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.தமீமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர். உடன் மாணவர் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
அதிரையில் பேரெழுச்சி! பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திரண்ட அதிரை மக்கள்!
அக்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று (28.10.2016) மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது. 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில் அடுத்த 10, 20 நிமிடங்களில் அதிரையின் பல்வேறு தெருக்களை சேர்ந்த ஜமாத்தார்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்ட இடத்தில் திரண்டனர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் பேசத் தொடங்கியபோது, ஒருக்கட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் வாகனப் போக்குவரத்து நெரிசலானது. பிற சமூக மக்களும் உரையை கேட்க திரண்டதால், ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் பன்மடங்காகியது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மத்திய அரசை கடுமையாக சாடி பொது சிவில் சட்டத்தின் அபத்தங்களை சாடினார். அப்போது பேசியதாவது, பிரதமர் மோடியின் மனைவி குஜராத்தில் தனியாக வசிக்கிறார். இருவரும் சேர்ந்து வாழவில்லை.பிரதமர் மோடி தன் மனைவியை பராமரிக்கவில்லை. அவருக்கு உதவித் தொகையை வழங்கவில்லை. இதை ஒன்றை காரணம் கூறி இந்து மதமே பெண்களை கொடுமைப் படுத்துவதாக கூறினால் அது எப்படி அபத்தமோ.... அப்படித்தான் தலாக் விஷயத்தை பார்க்க வேண்டும். எங்காவது ஒரு முஸ்லிம் பெண் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அதற்காக
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு! தமிழக அரசுக்கு மஜக பாராட்டு!
மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பறிக்கும் வகையிலும், மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பறது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 25.10.2016 அன்று இது குறித்து மத்திய அரசு டெல்லியில் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் உயர் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டு, பல கேள்விகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாட்டை, சட்டமன்றத்தில் நான் எடுத்துக் கூறியபோது, தமிழகத்தின் நலன்களையும், சிறுபான்மை மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் தமிழக அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என தெரிவித்ததை, இன்று தமிழக அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..... நன்றி ! இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 27_10_16
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு… மஜக சார்பில் தீபாவளி உதவி பொருட்கள்….
நாகையில் சமீபத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தீபாவளி அன்பளிப்பு பைகளை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, வழங்கினார். தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
நெய்வேலியில் மஜக பொதுச்செயலாளருக்கு உற்ச்சாக வரவேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA.,M.LA அவர்கள் நேற்று திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகருக்கு இரவு 9 மணி அளவில் வருகை தந்தார்கள். அவர்களுடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜீதீன் அவர்கள், நாகை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது முபாரக் ஆகியோர் வருகை புரிந்தனர். கடலூர் மாவட்ட செயலாளர் N.இப்ராகிம், மாநில செயற்க்குழு உறுப்பினர் P.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் நெய்வேலி நகர நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களை அ.தி.மு.க நகர கழக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான திரு.K.மனோகர் அவர்கள், திராவிட தொண்டு மைய தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான திரு.R.PS. பன்னீர் செல்வம் அவர்கள், அரிமா சங்க தலைவர் திரு.C.லட்சுமிநாராயணன் அவர்கள், அரிமா சங்க செயலாளரும் M.R.சரீப் அறக்கட்டளை தலைவரும்மான Ln. R.அன்வர்தீன்அவர்கள், அ.தி.மு.க மாவட்ட ஓட்டுனர் அணி துணை செயலாளர் திரு.பாலு அவர்கள், அ.தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. A.நாசர் அவர்கள், மந்தாரக்குப்பம் மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலின் துணை செயலாளரும் அர்-ரகமத் பள்ளின் தாளாரும்மான ஹாஜி.நஸ்ருல்லா அவர்கள்,