SIOவின் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் தமீமுன்_அன்சாரி Mla கலந்து கொண்டு சிறப்பித்தார்.

SIO (Student’s Islamic Organization of India)  சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் 26/10/2016 அன்று நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு ஆண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வியாளர் அஃப்ஸல் ஹூஸைன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.தமீமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர்.

உடன் மாணவர் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு