அக்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று (28.10.2016) மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.
5 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில் அடுத்த 10, 20 நிமிடங்களில் அதிரையின் பல்வேறு தெருக்களை சேர்ந்த ஜமாத்தார்களும், இளைஞர்களும் ஆர்ப்பாட்ட இடத்தில் திரண்டனர்.
மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் பேசத் தொடங்கியபோது, ஒருக்கட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் வாகனப் போக்குவரத்து நெரிசலானது.
பிற சமூக மக்களும் உரையை கேட்க திரண்டதால், ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் பன்மடங்காகியது.
பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மத்திய அரசை கடுமையாக சாடி பொது சிவில் சட்டத்தின் அபத்தங்களை சாடினார்.
அப்போது பேசியதாவது,
பிரதமர் மோடியின் மனைவி குஜராத்தில் தனியாக வசிக்கிறார். இருவரும் சேர்ந்து வாழவில்லை.பிரதமர் மோடி தன் மனைவியை பராமரிக்கவில்லை. அவருக்கு உதவித் தொகையை வழங்கவில்லை. இதை ஒன்றை காரணம் கூறி இந்து மதமே பெண்களை கொடுமைப் படுத்துவதாக கூறினால் அது எப்படி அபத்தமோ…. அப்படித்தான் தலாக் விஷயத்தை பார்க்க வேண்டும்.
எங்காவது ஒரு முஸ்லிம் பெண் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. அதற்காக முஸ்லிம் பெண்கள் எல்லோரும் கொடுமைக்கு ஆளாகி இருப்பது போல் கூறக்கூடாது. இஸ்லாம் அப்படிப்பட்ட விவாகரத்து முறையை எங்கும் கூறவில்லை.
இவ்வாறு பொதுச்செயலாளர் பேசினார்.
இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், அதிரை நகர செயலாளர் முஹம்மது செல்லா ராஜா, நகர பொருளாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர து.செயலாளர் புரோஸ் கான், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு,
தஞ்சை தெற்கு.