மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு! தமிழக அரசுக்கு மஜக பாராட்டு!

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை.

மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பறிக்கும் வகையிலும், மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பறது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த 25.10.2016 அன்று இது குறித்து மத்திய அரசு டெல்லியில் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் உயர் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்துக் கொண்டு, பல கேள்விகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாட்டை, சட்டமன்றத்தில்  நான் எடுத்துக் கூறியபோது, தமிழகத்தின் நலன்களையும், சிறுபான்மை மக்களின் நலன்களையும் காக்கும் வகையில் தமிழக அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என தெரிவித்ததை, இன்று தமிழக அரசு வெளிப்படுத்தியிருக்கிறது.

இதற்காக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்…..

நன்றி !

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
27_10_16