திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமாவின் ஒருங்கிணைப்பில் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினரும் பங்கேற்றனர். பலவேறு சமூகங்களை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
உடுமலைப்பேட்டையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பெருந்திரள் பொதுக்கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜமாத்துல் உலமாவின் ஏற்பாட்டில் பொதுசிவில் சட்டத்திற்கெதிரான பொதுக்கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துகுளம் ஜமாத்தார்கள் பெருந்திரளாக குவிந்தனர். இப்பொதுக்கூட்டத்தில் மஜக பொது செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, பள்ளப்பட்டி அரபிகல்லூரி பேராசிரியர் ஹபீப் முஹம்மது தாவூதி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு, திருப்பூர் மாவட்டம்.
மீத்தேன் திட்டம் ரத்து! மக்கள் போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி!
(மஜ௧ பொதுச்செயலாளர் M. தமிமுன்அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை, திருவாரூர் மற்றும் அதை ஒட்டிய நாகையின் எல்லை பகுதிகளில் 1.75 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தது. இது விவசாய நிலங்களை பாழ்படுத்தி, விவசாய உற்பத்தியை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாங்களை ஒழித்து விடும் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தினர். அப்போராட்டங்களில் நாங்களும் முழுமையாக பங்கெடுத்தோம். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. பிறகு, மத்திய அரசு மீத்தேன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனாலும், இத்திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதா? என்பது குறித்து விளக்கவில்லை. இந்நிலையில் நேற்று டெல்லியில் ஊடக துறையினர் நடத்தி மாநாட்டில் பங்கேற்ற பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டம், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த அறிவிப்பை வரவேற்பதுடன் அதில் மத்திய அரசு
JAQH சார்பில் கருத்தரங்கம் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
நவ.11., நாகூரில் நேற்று ( 10.11.16) JAQH அமைப்பு சார்பாக இஸ்லாமிய ஷரியத்தும் - பொதுசிவில் சட்டமும் என்ற பெயரில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி, JAQH அமைப்பின் மாநில பொருளாலர் P. நூர் முஹம்மது, M.G.K நிஜாமுதின் EX.MLA ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக ஊடக பிரிவு, நாகை தெற்கு.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நாகை MLA ஆறுதல்…
நாகை தாமரைகுளம் மேல் கரையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்ப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. திருமணத்திர்காக வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தன. நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.