மீத்தேன் திட்டம் ரத்து! மக்கள் போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி!

(மஜ௧ பொதுச்செயலாளர்
M. தமிமுன்அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)

தமிழகத்தின்
நெற்களஞ்சியமாம் தஞ்சை, திருவாரூர் மற்றும் அதை ஒட்டிய நாகையின் எல்லை பகுதிகளில் 1.75 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தது.                

இது விவசாய நிலங்களை பாழ்படுத்தி, விவசாய உற்பத்தியை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாங்களை ஒழித்து விடும் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.                  

விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தினர். அப்போராட்டங்களில் நாங்களும் முழுமையாக பங்கெடுத்தோம்.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
பிறகு, மத்திய அரசு மீத்தேன் எரிவாயு எடுக்க தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.                   

ஆனாலும், இத்திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதா? என்பது குறித்து விளக்கவில்லை.              இந்நிலையில் நேற்று டெல்லியில் ஊடக துறையினர் நடத்தி மாநாட்டில் பங்கேற்ற பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டம், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.           

அவரது அறிவிப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த அறிவிப்பை வரவேற்பதுடன் அதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.     

இவண்,
M.தமிமுன் அன்சாரி, MLA., பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
11.11.16